'கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்!' என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு விளக்கம் தெரிவித்து நமக்கொரு கடிதம் அனுப்பியிருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். அதில், 'கடந்த 26.09.2009 அன்று லண்டனில் நடைபெற்ற குறிப்பிட்ட அவ்விழாவில் ஏறத்தாழ ஒன்றேகால் மணி நேரம் உரையாற்றினேன். என் உரைக்குப் பின்னர் அனைவரும் எழுந்து நின்று கைகளைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஈழத்தமிழர்கள்யாரும் நீங்கள் எழுதியிருப்பது போல் அநாகரிகமாக நடந்து கொள்ள வில்லை. 'ஜீ' டி.வி-யில்நேர் காணலில்கலந்து கொண்டபோது, பாதியி லேயே அந்நிகழ்ச்சி முடிந்து விட்டதாகக் கூறுவது சரியல்ல. சிறப் பாக அது நடந்தேறியது. தி.மு.க-வுக்கு எதிரான கருத்து வந்தபோது, 'ஒரு மாநில அரசுவெளி யுறவுக்கொள்கைளில் முடிவெடுக்கமுடியாது!' என்பதை அழுத்த மாகவே கூறினேன். இலங்கையில் போர் உச்சத்திலிருந்போது, திரு.நடேசன், திரு.சேர லாதன் ஆகியோர் மட்டுமே என்னிடம் பேசினர். மேதகு பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசியதாக நான் கூறவே இல்லை. சேரலாதன்... அவரைத் தொடர்ந்து நடேசன் இருவருமே, 'இந்திய அரசையும் சோனியா காந்தியையும் தமிழகத் தலைவர்களில் சிலர் கடுமையாக விமர்சித்துப் பேசுவது' தவறு என்றும், 'நீங்களாவது அவ்வாறு பேசாமல் இருங்கள். எங்களுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு, எங் களுக்கு எதிரான வேலைகளைச் செய்துவிடாதீர்கள்' என்றும் கேட்டுக்கொண்டார்கள். இதைத்தான் நான் தங்கள் செய்தியாளரிடம் கூறியிருந்தேன் மாறாக, மேதகு பிரபாகரன் என்னிடத்தில் கூறியிருப்பதாக எழுதியுள்ளது தவறான பதிவு!' என்று தொல்.திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார். |
No comments:
Post a Comment