இருபாலரும் சேர்ந்து படிக்கும் திட்டத்தை எதிர்த்ததால்
ரியாத், அக்.7-
சவுதி அரேபியாவில் புதிய பல்கலைக்கழகம் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா தொடங்கி இருக்கிறார். சவுதி அரேபியாவில் இதுவரை இல்லாதவகையில் முதல் முறையாக ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்க இந்த பல்கலைக்கழகத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.
ரூ.35 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் இருபாலரும் சேர்ந்து படிப்பதை குறை கூறி அந்த நாட்டின் மதகுரு ஷேக் சாத் அல் ஷேத்ரி பேசினார். அவர் டி.வி.சேனலுக்கு அளித்த பேட்டியில், இருபாலர் கல்வி மிகப்பெரிய பாவம் என்றும், தீமை பயக்கும் என்றும் அவர் கூறினார். இதை தொடர்ந்து முஸ்லிம் உலமாக்கள் கவுன்சிலில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மன்னர் அப்துல்லா இந்த நடவடிக்கையை எடுத்தார்.
source:dailythanthi 7/10/09--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment