Saturday, October 31, 2009

சிறிலங்கா ரெலிகொம் பங்குகளில் 42 வீதமானவை புலிகளுக்குச் சொந்தம்?

 

சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் 42 வீதத்தை தாம் வாங்குவதற்காக விடுதலைப் புலிகள் மலேசியாவிலுள்ள மக்ஸிஸ் ஊடாக முதலிட்டமை தெரியவந்துள்ளதாம். இலங்கை தேசிய தொலைத்தொடர்பு சேவையான சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக இந்த பங்குகளை வாங்கும்படி கே.பி அனுமதிக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

சிறி லங்கா ரெலிகொம்மின் 51.23% பங்குகள் அரசாங்கத்து உரியன். 2008 ஆம் ஆண்டு ஏப்பிரல் முதலாம் திகதி மக்ஸிஸ் நிறுவனம் 320 பில்லியன் ரூபா முதலிட்டு 42% பங்குகளை வாங்கியுள்ளது. தொலைத்தொடர்பு பிரிவின் தலைவர் ஒருவரும் அவரது சகோதரரும் இந்த வியாபாரத்தை நடத்திக் கொடுத்ததாகவும் அதற்காக மக்ஸிஸ் அவர்களுக்கு 1 பில்லியன் ரூபா தரகுப்பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் மேலும் கூறப்படுகிறது. 

ஆனால், தேசிய பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அதில் இணைந்தபோது, அந்த உடன்படிக்கை முறிந்து விட்டது. இலங்கை ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரியை, -அவருக்கு போதிய தகுதிகள் இல்லாதபோதும்- நியமனம் செய்தது மக்ஸிஸ் என்றும் அவரது சம்பளம் 13 மில்லியன் என்றும் ஒரு செய்தி கூறுகிறது. இருப்பினும் இவை அனைத்துமே இலங்கை அரசால் சொல்லப்படுகின்ற செய்திகள். இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.



source:athirvu

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails