ஆரஞ்செரி என்பது ஒரு வகை பச்சை மாளிகை. இந்த "மார்க்கம் கோட்டை' 1787 - 93ல் கட்டப்பட்டது. இங்கு வெவ்வேறு வகையான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை மரங்களால் இந்த பச்சை மாளிகை கட்டப்பட்டது. 327 அடி நீளம் கொண்ட நீண்ட தோட்டம் உள்ளது. இதுவே உலகின் முதன் முதலில் கோட்டைக்குள் செடிகள் வளர்த்து பராமரிக்கப்பட்ட கட்டடமாகும். இந்த மாளிகை இங்கிலாந்தில் உள்ளது.
***
நம் மூளையில் இடது பகுதி உடலின் வலது பக்கத்தையும், வலது பகுதி உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு, இடதுபக்க மூளை பகுதி ஆதிக்க மிக்கதாக இருக்கும். வலது கை பழக்கம் தொடர்ந்து பயிற்சி பெற்று வரும்போது நாளடைவில் இடப்புற மூளையின் செயல்திறன் வலுவடைகிறது. ஆனால், இடது கை பழக்கமுள்ள குழந்தையை வலுக்கட்டாயமாக வலது கைக்கு மாற்ற முயலும் போது மனவெழுச்சி சிக்கலின் காரணமாக திக்குவாய் ஏற்படலாம்.
***
பிட்டாகுய் பறவை!
பறவைகள் பொதுவாக விஷத்தன்மை அற்றது. ஆனால், நியூகுனியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிட்டாகுய் பறவை விஷத்தன்மைக் கொண்டது. இதன் தலை, கழுத்து மற்றும் வால் பகுதி கறுப்பாக இருக்கும். இதன் இறகுகளும், இறைச்சியும் விஷத்தன்மைக் கொண்டது. இதன் இறைச்சியை உண்டால் லேசான மயக்கத்தைத் தான் உண்டாக்கும். ஆனால், எதிரியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த விஷத்தன்மை உதவுகிறது.
***
source:dinamalar
--www.thamilislam.co.cc
No comments:
Post a Comment