நோபல் பரிசுக்கு ஓபாமா தகுதியானவரா?
நோபல் பரிசு ஒரு துறையில் சாதித்தவர்களுக்கு கொடுக்கப்படுவதை நாம் அறிந்ததே.
ஆனால் ஓபாமா என்ற பதம் உலக அரங்கில் ஒழிக்கத் தொடங்கியதே கடந்த வருடம் அமேரிக்க தேர்தலை முன்னிட்டுதான்.அதிலும் மிகப்பெரிய இரட்சகனாக,சூப்பர் மேன்,ஜேம்ஸ் பாண்ட்,ஸ்பைடர் மேன் போன்ற கதகளின் கதாநாயகர்களை போல திடிர் என்று வந்து உலக மக்களை குறிப்பாக அமெரிக்க மக்களை பெரிய விடிவுக்குள்ளாக கொண்டு செல்வார் என்ற பகல் கனவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு அளித்து அந்த பரிசின் நல்ல நோக்கத்துக்கு கழங்கம் விளைவித்துள்ளானர்.
அப்படி ஓபாமா சாதித்தது என்ன?
ஈராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுவிட்டாரா?
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுள்ளாரா?
அல்லது பாக்கிஸ்தானுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தியுள்ளாரா?
ஈரான் மீது அழுத்தம் கொடுப்பதை குறைத்துள்ளாரா?
எல்லாவற்றையும் விட ஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்களக் காட்டேரிகள் கொன்று குவித்ததை தடுத்தாரா?
இல்லை அடிமைகள் போல் அகதி முகாமில் வாழும் மக்களை விடுவிக்க தைரியமாக அழுத்தம் கொடுத்தாரா?
இவை எதுவுமே செய்யாத ஒரு புண்ணியவானுக்கு நோபல் பரிசு ஒரு கேடா?
ஏன் அமேரிக்க பொருளாதாரத்தை என்ன தூக்கி நிறுத்திவிட்டார இவர்?
எதுவுமே இல்லை,இல்லை,இல்லை என்பதுதான் பதில்
ஒரு குட்டி நாடான இலங்கையை தட்டிக்கேட்க கூட தைரியம் இல்லாத இவருக்கு நோபல் பரிசு ஒரு கேடா?
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment