இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் முதல் தேசியகீதத்தை இயற்றியவர் ஒரு இந்து என்று, பத்திரிகையில் கட்டுரை வெளியானதை அடுத்து, புது சர்ச்சை எழுந்துள்ளது.இந்தியாவில் இருந்து பிரிந்தது பாகிஸ்தான்; 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைய, மூன்று நாட்களுக்கு முன் நாட்டின் தலைவர் முகமது அலி ஜின்னா, லாகூரைச் சேர்ந்த உருது கவிஞர் திலக்சந்த் மக்ரூம் என்பவரது மகன் ஜகன்னாத் ஆசாத்தை பாக்., தேசிய கீதத்தை எழுதும்படி கூறினார்.
அதன்படி, ஆசாத் உருது மொழியில் தேசிய கீதத்தை இயற்றினார். "அயி சர்சாமேனே பாக் சர்ரே...' என்ற அந்த பாடல் ஆறு மாதங்கள் நடைமுறையில் இருந்தது.ஜின்னா, 1947 செப்டம்பரில் மறைந்து விட்டார். ஜின்னாவுக்கு பின்னர் பதவியேற்ற அரசு அப்பாடலை நீக்கிவிட்டது. பின், தேர்வுக்குழுவின்பரிந்துரையின் படி புதியதாக எழுதப்பட்ட 723 பாடல்களில், ஹபீஸ் ஜலந்ரி என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய பாடல் தேர்வு செய்யப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.
சமீபத்தில் "டான்' என்ற பிரபல பாக்.,பத்திரிக்கை, பீனா சர்வார் என்ற கவிஞர் கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளார். அதில் அவர், மதச்சார்பின்மையை கடைபிடிப்பவரான ஜின்னா,பாக்., தேசிய கீதத்தை ஒரு இந்துவை எழுதச் சொல்லி இருக்கிறார்."ஒரு இந்து, இந்து மதப்பாடல்களை தான் பாடவேண்டும்; முஸ்லிம் தன் மதப் பாடல்களை தான் பாடவேண்டும் என்பதில்லை.
இந்தியாவில், இக்பால் என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய சாரே ஜகான் சி அச்சா என்ற பாடலை குழந்தைகள் அனைவரும் உச்சரித்து இன்றளவும் பாடி வருகின்றனர். அப்படியிருக்கையில், பாக்.,கில் இந்து எழுதிய தேசிய கீதத்தை ஏன் பின்பற்றக் கூடாது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment