Friday, October 30, 2009

இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப்


 

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிக பயனுள்ள செயல்பாட்டினை லேப் டாப் கம்ப்யூட்டர் தருவதாகப் பலர் கருதுகின்றனர். இதற்குக் காரணம் எங்கும் எடுத்துச் சென்று இதனைப் பயன்படுத்த முடிவதே. இருப்பினும் மற்ற வழிகளில் லேப்டாப், டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான செயல்பாட்டுக்கே வழி அமைக்கிறது. 



லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை இன்னும் கூடுதலாக முழுமையாக்கும் வகையில், இரு மானிட்டர்கள் இ?79;ைந்த லேப் டாப் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. ஸ்பேஸ்புக் என அழைக்கப்பட இருக்கும் இந்த லேப் டாப் வடிவத்தினை ஜிஸ்கிரீன் (gscreen) என்னும் அலாஸ்கா தொழில் நுட்ப நிறுவனம் தந்துள்ளது. இதில் 15.4 அங்குல அளவிலான இரு ஸ்கிரீன்கள் இருக்கும். இதனால் பல வேலைகளை ஒரே நேரத்தில், ஒரு கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு மேற்கொள்ள முடியும். இதன் மூலம் கம்ப்யூட்டரின் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியும். 13, 16 மற்றும் 17 அங்குல அகலத்தில் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களையும், இந்நிறுவனம் வெளியிடத் திட்டமிடுகிறது. 



தேவைப்படும்போது இரண்டாவது ஸ்கிரீன் ஸ்லைடிங் போன் போல வெளியே இழுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். தேவையில்லாத போது மடக்கி வைக்கப்பட்டு ஒரு திரையுடன் இது பயன்படும்.  இந்த இரு திரை லேப் டாப் கம்ப்யூட்டர், இன்டெல் கோர் 2 டுயோ சிப், 4 ஜிபி ராம், 320 ஜிபி திறன் கொண்ட 7200 ஆர்.பி.எம். ஹார்ட் டிஸ்க், டிவிடி டிரைவ் மற்றும் பல வழக்கமானவற்றுடன் அமைக்கப்படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இது அமேசான் இணைய தளம் வழியாக வெளியிடப்படலாம். விலை இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜிஸ்கிரீன் நிறுவனம் இதனை 3,000 டாலருக்குள் இருக்கும்படி அமைக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது.



source:dinamalar--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails