Tuesday, October 27, 2009

பெண் பத்திரிகையாளருக்கு கசையடி தண்டனை ரத்து


 துபாய் : சவுதி அரேபியாவில், "டிவி' சேனலில் செக்ஸ் நிகழ்ச்சி தயாரித்த பெண் பத்திரிகையாளருக்கு விதிக்கப்பட்ட கசையடி தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.


லெபனான் நாட்டு "டிவி' சேனல், கடந்த ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் ஜவாத் என்பவர் திருமணத்துக்கு முந்தைய தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசினார். இந்த நிகழ்ச்சி சவுதி அரேபிய தலைநகர் ஜெட்டாவில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதற்காக ஜவாத்துக்கு ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த பெண் பத்திரிகையாளர் ரோசனா அல் யாமி என்பவருக்கு 60 கசையடி அறிவிக்கப்பட்டது. செக்ஸ் பற்றி பகிரங்கமாக "டிவி' மற்றும் ரேடியோவில் பேசுவது சவுதியில் சட்ட விரோதமாக கருதப்படுகிறது.



"போல்டு ரெட் லைன்' என்ற பெயரில் லெபனான் "டிவி' யில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சவுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசியது குற்றமாக கருதப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் என்ற முறையில், தனது தொழிலை ரோசனா செய்துள்ளார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு இது போன்ற கொடுமையான தண்டனை அளிக்கக்கூடாது, என பல்வேறு பத்திரிகைகள் சார்பில் சவுதி அரேபிய அரசிடம் வற்புறுத்தப்பட்டது.இதையடுத்து, இது குறித்து விசாரிக்கும் படி சவுதி மன்னர் அப்துல்லா, தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவை ஏற்று, சவுதி தகவல் தொடர்பு அமைச்சகம் ரோசனா மீதான தண்டனையை 



source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails