Saturday, October 31, 2009

பிலிப்பைன்ஸ் நாட்டை மீண்டும் புயல் தாக்கியது: 1 லட்சம் மக்கள் வெளியேற்றம்


 
 மணிலா,அக்.31-
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) கெத்சனா என்ற புயல் கடுமயாக தாக்கியது. இதில் தலைநகர் மணிலா கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அங்கு பேரழிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அங்கு புதிய புயல் உருவாகியுள்ளது.
 
இதற்கு மிரினே என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் குயேஷோன் கடற்கரை மாகாணத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் அங்கு பலத்த காற்று வீசுகிறது. கடுமையாக மழை பெய்கிறது. இப்புயல் இன்று காலை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் குயேஷோன் உள்ளிட்ட 5 மாகாணங்களை தாக்கியது.
 
தெற்கு மணிலாவில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாந்தாகுரூஷ் நகரில் உள்ள ஏரிகளும் பெருகி உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஒரு லட்சம் மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் தாக்குதலில் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்புயில் வியட்நாம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த மாதத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கும் 4-வது புயலாகும். புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails