Thursday, October 8, 2009

மக்கள்தான் புலிகள்; புலிகள்தான் மக்கள்; இவர்களை நீங்கள் எவ்வாறு பிரித்து இனம் காண முடியும்

 மக்கள்தான் புலிகள்; புலிகள்தான் மக்கள்; இவர்களை நீங்கள் எவ்வாறு பிரித்து இனம் காண முடிம்




kaelinதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும், அப்பாவி பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு  வேறுபடுத்தி அறிந்து கொள்ளப் போகின்றதென ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
 
முகாம்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் அகதிகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுடன் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாகவும், அவர்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் வரையில் பொதுமக்களை மீளக் குடியேற்ற முடியாது எனவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.
 
எனினும், புலிகளையும் பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
விடுதலைப் புலிகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அரசாங்கத்தின் வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தாம் உணர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், மக்களை மீள் குடியேற்றுவது குறித்த சரியான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


source:nerudal

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails