Wednesday, October 14, 2009

பூமியில் இன்னும் மீட்பர்கள் இருக்கிறார்கள்!

பூமியில் இன்னும் மீட்பர்கள் இருக்கிறார்கள்!


எழுதினால் உருப்படியாக எழுதவேண்டும் என்ற எனது தீர்மானத்தில் கடந்த சில நாட்களாக எதுவும் எழுதாமல் வலைப்ப் பூக்ககளை மேய்ந்து கொண்டிருந்தேன். வாசிப்பது ஒரு சுகம். நல்ல பதிவுகளை தேடி தேடி ..........


வாசித்தேன். பல பதிவுகள் என்னை பாதித்தன, பக்குவப்படுத்தின, சமயத்தில் மிகவும் படுத்தவும் செய்தன. அவற்றைப் பற்றியல்ல இந்தக் கட்டுரை. நான் வாசித்தவற்றில் பல எனது இருதயத்தைக் கரைந்து போகச் செய்திருந்தாலும் சமீபத்தில் ஆனந்தவிகடனில் வாசித்த ஒரு கட்டுரை கண்களைப் பனித்தது. அதையே ஒரு மறுபதிப்பாக தருகிறேன்.


''என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உன் னைத் தொடரும்.'' கண்களை மூடி பைபிளின் வார்த்தைகளை அத்தனை அழுத்தமாக உச்சரிக்கிறான் ஜெரோனியா ஜஸ்டின்... கடவுளின் குழந்தை!

ஜஸ்டினுக்குத் தலையும் முகமும் கலைந்து விநோதமாக இருக் கிறது. காதுகள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு சதைத் துண்டுகள். தெளிவான பேச்சு இல்லை. காது மடலும் துளைகளும் இல்லை. முகத்தில் தாடை எலும்பு இல்லை. கண்களின் கீழ் எலும்பு கள் இல்லை. இப்படிப் பல இல்லைகள். 16 வருடங்களாக வாழ்க் கையுடன் போராட்டம் நடத்தும் ஜெரோனியா... ஒரு தன்னம்பிக்கை வரலாறு. ஜெரோனியாவின் அப்பா இம்மானுவேல், அம்மா டல்சி பிரீடாவின் முகங்களில் 16 வருடங்களாகப் பையனை மருத்துவ மனைக்குத் தூக்கிச் சுமந்த களைப்பு அப்பிக்கிடக்கிறது.

எங்க சொந்த ஊர் தூத்துக்குடி. இவன் பிறந்த உடனே 'தலைப்பகுதி உறுப்புகளில் முழுமையான வளர்ச்சி இல்லை. மூளை வளர்ச்சியும் கொஞ்சம் குறைவா இருக்கு... பிழைக்கிறது ரொம்பக் கஷ்டம்'னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. போகாத சர்ச்சோ, ஹாஸ்பிட்டலோ இல்லை. சென்னை டாக்டர் ஒருத்தர்தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து, காதைச் சரிபண்ணுற முதல் ஆபரேஷனை செஞ்சார். அப்போ இவனுக்கு நாலரை வயசு. இவனுடைய நெஞ்சு விலாவில் இருந்து எலும்பு எடுத்து, காது மடல் போல ஒட்டிவிட்டாங்க. அப்போ தொண்டைக் குழியில் ஓட்டை போட்டு டியூப் செருகி சுவாசிக்கணும். ஒரு தும்மல், இருமல் வந்தாலும் அந்த டியூப் வெளியில் வந்துரும். மூச்சுக்காத்து கிடைக்காம இவனுக்கு நெஞ்சு தூக்கித் தூக்கிப் போடும். ஒரு விநாடிகூட கண் அசராம ஆள் மாத்தி ஆள் இவனைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். ரெண்டு வருஷம் கழிச்சுத் திரும்பவும் காது மடலில் ஆபரேஷன். காதில் துளைகள் இல்லைன்னாலும் கடவுள் புண்ணியத்தில் கொஞ்சம் சத்தமாகப் பேசினா, ஜெரோனியாவுக்குக் கேட்கும்.

ஏழு வயசு வரைக்கும் வெறும் பாலும் முட்டையும்தான் சாப் பாடு. மேல் தாடையும் கீழ்த் தாடையும் ஒண்ணு சேராம தனியா இருந்தது. ஒரு வருஷம் விட்டு விட்டு ஆபரேஷன் பண்ணினாங்க. மேல் தாடை விரிவடைய, கடைவாய்ப் பற்களை இணைச்சு ஒரு ஸ்க்ரூவால் ஆன கம்பியை மாட்டினாங்க. வாரம் ஒரு தடவை அந்த ஸ்க்ரூவை ஒரு மி.மீ. வீதம் அகலமாக்கணும். ரெண்டு வருஷப் போராட்டத்தில் மேல் தாடை ஓரளவுக்கு அகலமாச்சு. பேச்சுதான் பழைய மாதிரி இல்லாம குழறுது. 'ரெண்டு வருஷமா வாய்க்குள்ள கம்பி இருந்ததால பேச்சு கொஞ்சம் குழறுது. காலப் போக்கில் சரியாகிரும்'னு டாக்டர்கள் சொல்லியிருக் காங்க. நாளைக்குக் கீழ்த்தாடை ஆபரேஷன். அதே மாதிரி ஸ்க்ரூ கம்பி மாட்டணும்.'' மருத்துவமனை அறைகளே வாழ்க்கையாக மாறிப்போனதை விவரிக் கிறார் ஜஸ்டினின் அம்மா டல்சி பிரீடா.

ஜஸ்டின் இப்போது தூத்துக்குடி பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படிக்கிறான். ஃபெயிலாகாத அளவுக்குப் படிக்கும் ஜஸ்டின், taekowondo என்ற கராத்தே போன்ற தற்காப்புக் கலையில் பல கட்டங்களைக் கற்றிருக்கிறான். ''நாங்க சம்பாதிக்கிறது எல்லாமே ஆஸ்பத்திரிக்குதான் செலவாகுது. ஒவ்வொரு ஆபரேஷனுக்கும் லட்சக்கணக்கில் செலவு. இந்த 16 வருஷத்தில் கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேல் கடன். இதுக்கு மேல ஆகப்போற செலவுகளுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. 18 வயசு வரைக்கும் தான் எலும்புகள் வளரும்கிறதால எல்லா ஆபரேஷ னையும் இன்னும் ரெண்டு வருஷத்துக்குள் பண்ணி ரணும். இவனோட கண்ணுக்குக் கீழே எலும்புகளை டோனர்கிட்டே இருந்து வாங்கிப் பொருத்தணும். எங்களை இவ்வளவு தூரம் கொண்டுவந்து சேர்த்த கர்த்தர் மீதி இருக்குற தூரத்துக்கும் வழி காட்டாமலா போயிருவார்?'' மிச்சம் இருக்கும் நம்பிக்கையோடு பேசுகிறார் இம்மானுவேல். சலனமற்ற முகத்தோடு இருவரையும் பார்த்துப் புன்னகைக்கிறான் ஜஸ்டின்.

இந்தப் பூமியில் இன்னும் மீட்பர்கள் இருக்கிறார்கள்!

source:askubisku.blogspot


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails