இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக லல்லுபிரசாத் எழுதும் புத்தகம்
பாட்னா, அக். 28-
அடுத்த ஆண்டு பீகார் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடை பெற உள்ளது. மத்திய மந்திரி சபையில் இடம் பெறாததால் தேசிய அரசியலில் இருந்து லல்லுபிரசாத் மாநில அரசியலில் தீவிரகவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இப்போதே அவர் மக்களை கவரும் வகையில் பல அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார்.
பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி 1992-ல் பீகார் மாநிலம் வழியாக ரதயாத்திரை மேற்கொண்டார். இந்த ரதயாத்திரைக்கு தடை விதிக்காமல் அப்போது முதல்- மந்திரியாக இருந்த லல்லுபிரசாத் யாதவ் நடுநிலை வகித்தார்.
இந்த நிலையில் இந்த ரதயாத்திரையை தடுக்க முடியாமல் போனது ஏன்? என்பது பற்றி புத்தகம் எழுதப்போவதாக லல்லுபிசாத்யாதவ் அறிவித்துள்ளார்.
பாட்னாவில் இம்ராத் அகலே அன்சார் அல்- ஹிண்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் லல்லுபிரசாத் யாதவை சந்தித் தனர். அவர்கள் மத்தியில் பேசுகையில் லல்லுபிரசாத் யாதவ் புத்தகம் எழுதும் அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் தொடர்ந்து நான் பாடுபடு வேன். 1992-ல் அத்வானியின் ரதயாத்திரை பீகார் மாநிலம் வழியாக சென்று சமஸ்டிபூரில் நிறைவடைந்தது.
அப்போது ரதயாத்தி ரையை தடை செய்யவிடாமல் சில சக்திகள் தடுத்து விட்டன. இது தொடர்பாக நான் ஒரு புத்தகம் எழுதப்போகிறேன். அந்த புத்தகத்தில் அத்வானியின் ரத யாத்திரையை தடை செய்ய விடாமல் செய்தது யார் என்பது பற்றி விளக்கு வேன்.
இவ்வாறு அவர் கூறினார்
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment