Monday, October 19, 2009

கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் டி.டி.410

 
 


பல்வேறு அளவுகளிலும், வடிவமைப்பிலும் பிளாஷ் டிரைவ்களை விற்பனை செய்துவரும் கிங்ஸ்டன் நிறுவனம், அண்மையில் தன் டேட்டா ட்ராவலர் டி.டி. 410 (Data Traveler DT 410)பிளாஷ் டிரைவினை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விநாடியில் 20 எம்பி டேட்டாவினைப் படிக்கவும், எழுதவும் செய்கிறது. 4ஜிபி முதல் 32 ஜிபி வரையிலான கொள்ளளவில் கிடைக்கிறது. இதில் உள்ள டேட்டாவின் பாதுகாப்பிற்கு செக்யூர் ட்ராவலர் (Secure Traveler) என்னும் சாப்ட்வேர் இதில் பதியப்பட்டுள்ளது. சிறிய அளவில் டேட்டா பயன்படுத்துவோருக்கு 10 எம்பி வேகத்தில் டேட்டாவினக் கையாளும் பிளாஷ் டிரைவ் ஒன்றும் கிடைக்கிறது. இவற்றின் விலை பின்வருமாறு: 4ஜிபி கொள்ளளவு கொண்டது ரூ.999; அடுத்த நிலையில் 8 ஜிபி திறன் கொண்டது ரூ. 1,650; 16 ஜிபி ரூ. 3,350க்கும், 32 ஜிபி ரூ. 5,777க்கும் விலையிடப்பட்டுள்ளது. விற்பனையில் ட்ரான்ஸென்ட் நிறுவனத்தின் ஜெட் பிளாஷ் பென் டிரைவ் களுடன் இவை போட்டியிலாம்.

வயர்லெஸ் கீ போர்டு
மதர் போர்டு மற்றும் கிராபிக்ஸ் கார்டுகளை வடிவமைத்து வழங்கி வரும் கிகாபைட் (Gigabyte) நிறுவனம் அண்மையில் வயர்லெஸ் கீ போர்டு மற்றும் மவுஸ் என இரண்டையும் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இவை சாதாரணமாக கிடைக்கும் பேட்டரிகளில் இயங்குகின்றன. கீ போர்ட் வடிவமைப்பு மிகவும் பயனுள்ளதாகவும், குறைந்த எடை உள்ளதாகவும் உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரை அல்லது லேப்டாப்பினை டிவியுடன் இணைத்துவிட்டு சற்று தள்ளி சோபாவில் அமர்ந்து கம்ப்யூட்டரை இயக்குபவரா நீங்கள்! அப்படியானால் உங்களுக்கான கீ போர்டு இதுதான். ஏறத்தாழ 10 அடி தூரத்தில் வைத்தும் இவற்றை நல்ல முறையில் இயக்க முடிகிறது. கீ போர்டிம் மேலாக மல்ட்டி மீடியா கீகள் தரப்பட்டுள்ளன. வலது மேல் புறத்தில் வால்யூம் கண்ட்ரோல் செய்திட டயல் தரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் பயன்படுத்தினால், பேட்டரிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் செயல்படுகிறது.
இந்த இரண்டும் இணைந்து ரூ.2,199 என விலையிடப்பட்டுள்ளது. சற்று விலை அதிகம் தான். விலை காலப்போக் கில் குறைக்கப் படும் என எதிர்பார்க் கலாம். இருந்தாலும் வாங்கினால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இரண்டும் எதிர்பார்த்த செயல்பாட்டினைத் தருகின்றன.

பிஷ்ஷிங் மெயில்கள் எக்கச் சக்கம

மெசேஜ் லேப்ஸ் (Message Labs) என்னும் நிறுவனம் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக செல்வது குறித்துத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிறுவனமாகும். அண்மையில் இந்நிறுவனம் வெளியிட்ட சில தகவல்களின் படி, பிஷ்ஷிங் மெயில்களின் எண்ணிக்கை கற்பனையில் எண்ண முடியாதபடி உயர்ந்துள்ளனவாம். 
பிஷ்ஷிங் என்பது இன்டர்நெட்டில் வரும் வேஷம் போட்ட இமெயில்களாகும். பிரபல நிறுவனங்களிலிருந்து வரும் இமெயில்களைப் போல இவை நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். இவை நம்மை முட்டாள் ஆக்குவதோடு, லிங்க்குகளைக் கொடுத்து, அவற்றில் கிளிக் செய்து பிரபலமான நிறுவனங்களின் இணைய தளங்களைப் போல தளங்களை உருவாக்கிஅவற்றில் நம்மைக் கொண்டு போய் நிறுத்து. பின் நம்மை நம்பச் செய்திடும் தகவல்களைக் கூறி, அவற்றின் மூலம், நம் பாஸ்வேர்ட், மெயில் முகவரி ஆகியவற்றைத் திருடிப் பயன்படுத்தும். 
ஐ.சி.ஐ.சி. ஐ. பேங்க், சிட்டி பேங்க், மைக்ரோசாப்ட், பே பால் எனப் பிரபலமான பல நிறுவனங்களின் பெயர்களில் எனக்கு வாரந்தோறும் குறைந்தது ஏழு பிஷ்ஷிங் மெயில்களாவது வருகின்றன. பார்த்த மாத்திரத்தில் அவற்றை டெலீட் செய்து, பின் ட்ராஷ் பெட்டியிலிருந்தும் நீக்கிவிடுகிறேன்.

மீடியா பிளேயரில் பயன்படும் ஷார்ட் கட் கீகள்
விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்
ALT+1: 50  சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர 
ALT+2 : ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரையில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T: டூல்ஸ் மெனு செல்ல
ALT+P: பிளே மெனு செல்ல
ALT+F4:  மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1:  மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2:  மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B  இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F :வரிசையில் அடுத்த பைலை இயக்க 
CTRL+E:  சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+Pஇயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T:  இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F:  ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S:  வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க 
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க 
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/ வீடியோ இயக்க
F8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9 மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar: ஒரு பைலை இயக்க

டிப்ஸ்.... டிப்ஸ்....
பிட் தகவல்களை எழுதி வைக்க:
நாம் நம் டேபிளில் சிறிய சிறிய பிட் பேப்பர்களில் ஏதாவது எழுதி வைப்போம். குறிப்பாக டெலிபோன் எண்கள், டெலிபோனில் நண்பர்கள் கூறும் செய்திகள் என ஏதாவது இருக்கும். இதே போல் கம்ப்யூட்டரிலும் தகவல்களை பிட்பிட்டாக அமைத்து வைக்கலாம். இவற்றை நோட்ஸ் என்னும் தலைப்பில் அமைத்துவிட்டால் தேவைப்படும்போது விரித்துப் பார்க்க எளிதாக இருக்குமே. டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். பின் கிடைக்கும் மெனுவில் New என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் Text Document  என்பதனைத் தேர்வு செய்திடவும். அதற்கு 'notes' எனப் பெயரிடவும். இனி எப்போது இதில் குறிப்புகளை எழுத வேண்டும் என எண்ணினாலும் டபுள் கிளிக் செய்து இதனைத் திறக்கவும். அதன்பின் எப்5 அழுத்தினால் அன்றைய தேதியும் நேரமும் அதில் பதியப்படும். அதன்பின் நீங்கள் எழுத விரும்பும் குறிப்புகளை எழுதவும். எழுதி முடித்தவுடன் கண்ட்ரோல் +எஸ் கீகளை அழுத்தி சேவ் செய்து வெளியேறவும். பின் இதில் என்ன எழுதினோம் என்பதனை நினைவு படுத்திப் பார்க்க மீண்டும் டபுள் கிளிக் செய்து திறக்கலாம்.

* ஸ்டேண்ட் பை Vs ஹைபர்னேட் 
சிஸ்டத்தை ஹைபர்னேட் செய்தால் என்ன நடக்கும்? உங்கள் கம்ப்யூட்டர் ஹைபர்னேட் வழிக்குச் செல்கையில் மெமரியில் என்ன என்ன இருக்கிறதோ, அவை அனைத்தையும் ஹார்ட் டிஸ்க்கிற்கு மாற்றி சேவ் செய்திடும். அதன் பின் ஷட்டவுண் செய்திடும். ஹைபர்னேஷன் முடிந்து மீண்டும் திரும்புகையில் பழைய நிலைக்குத் திரும்பும்.சிஸ்டம் ஹைபர்னேட் செய்வதற்கு 503 எம்பி இடம் தேவைப்படும். அப்படி யானால் ஸ்டேண்ட் பை என்பதற்கும் ஹைபர்னேட் என்பதற்கு வேறுபாடு என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஸ்டேண்ட் பை நிலையில் உங்கள் கம்ப்யூட்டர் குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்துகிறது. அந்த நேரத்தில் நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள். உடன் பயன்படுத்த வேண்டும் என்றால், உடனே கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்குக் கிடைக்கும். 
ஹைபர்னேட் செய்திடுகையில், மெமரியில் உள்ள டேட்டா அனைத்தும் சேவ் செய்யப்படும். சிஸ்டம் ஷட் டவுண் ஆகும். ஹைபர்னேஷனிலிருந்து நீங்கள் வெளியே வருகையில், நீங்கள் திறந்து வைத்திருந்த அனைத்து பைல்களும் அந்த புரோகிராம்களில் திறக்கப் படும். இதனால் லேப் டாப் போன்ற சாதனங்களில் பேட்டரி பயன்பாடு மிச்சப்படுத்தப்படுகிறது.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails