தமிழ் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்று பல காலமாக இயங்கிவந்த புதினம் இணையத்தளம் oct 18 முதல் முடக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது. புதினம் இணையத்தளம் மே 17 வரை தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய இணையத்தளமாக இயங்கிவந்தபோதும், "வழுதி" போன்றோர் எழுதிய சில கட்டுரைகள் காரணமாக ஈழத் தமிழர்களின் எதிர்ப்புக்களையும், இதனால் பல சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிக்கும் ஒரு முக்கிய இணையமாக விளங்கியது புதினம். இவ்வாறு காரணம் எதுவும் சொல்லாமல் தனது சேவைகளை அது முடக்கியதற்கான சரியான காரணத்தை வெளியிடவேண்டும்.
அத்துடன் வழுதி போன்றோரின் கட்டுரைகளை எழுதி தமிழ் மக்களைக் குழப்பி தற்போது திடீரென இவ்வாறு முடங்குவது, ஏன் எனத் தெரியவில்லை. விமர்சனங்கள் இல்லாமல் நாம் செயல்பட முடியாது. அதுபோல ஆழும் கட்சி என்றால் எதிர்க் கட்சியும் இருந்தாக வேண்டும். அந்த வகையில் நல்லது கெட்டதுகளை, மற்றும் விமர்சனங்களை அது முன்வைத்தது. இருப்பினும் புதினம் இணையம் இனிச் செயல்படாது என்ற அறிவிப்பை பார்ப்பதில் அதிர்வு இணையம் ஆச்சரியமடைவதுடன் தனது கவலையையும் தெரிவிக்கிறது.
புதினம் இணையத்தளம், அதன் உரிமையாளர்களால் முடக்கப்பட்டதா இல்லை, அதன் வலையத்தளத்தில் எவரேனும் ஊடுரு இவ்வாறு செய்திருக்கிறார்களா என இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் பல நேயர்கள் புதினம் ஏன் முடக்கப்பட்டது என எம்முடன் தொடர்புகொண்டு கேட்டதற்கமைவாக இச் செய்தியை நாம் பிரசுரிக்கிறோம்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment