Thursday, October 29, 2009

வேலையின்மை, வறுமை மட்டுமல்ல தண்ணீராலும் வளரும் தீவிரவாதம்

 

ஜம்மு, : வேலையில்லா திண்டாட்டம், பசி, வறுமை ஆகியவற்றால் இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு தள்ளப்படுவதெல்லாம் பழைய நடைமுறை. தண்ணீர் கிடைக்காமல் தீவிரவாதியாவது புதியது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் Ôபஞ்சாபி தலிபான்Õ தீவிரவாதம் அதிகரித்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜிகாதி அமைப்புகள், இளைஞர்களை பஞ்சாப் தலிபானில் சேர்க்கின்றன. அவர்களிடம் இந்தியாவுக்கு எதிராக ஜிகாதி அமைப்புகள் போடும் தூபம் என்ன தெரியுமா? தண்ணீர். பஞ்சாப் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாபுக்குள் ரவி, சட்லஜ், பீஸ் என மூன்று நதிகள் பாய்கின்றன. தென்மேற்கு பருவமழை பல வடமாநிலங்களில் பொய்த்துப் போனதால் அந்த நதிகளில் நீர் இல்லை. ஆனால், நிலைமையை மறைத்து, 

பாகிஸ்தானுக்குள் வரும் நதி நீரை இந்தியா தடுத்து, வறட்சி ஏற்படுத்தி விட்டதாக பாக். பஞ்சாபில் ஜிகாதி அமைப்புகள் விஷ(ம) பிரசாரம் செய்கின்றன. இந்த அமைப்புகளுக்கு லஷ்கர் &ஈ& தொய்பா, அல்&கய்தா, தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளது. Ôநதிகளில் அணைகளை கட்டி நீரைத் தடுத்து, பாகிஸ்தானில் வறட்சி ஏற்படுத்தும் இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்துங்கள்Õ என்று பாக். பஞ்சாப் இளைஞர்களை இந்த அமைப்புகள் தூண்டி விடுவது தெரிய வந்துள்ளது. அவர்களது பொய் பிரசாரத்தை உண்மை என நம்பி, பஞ்சாப் தலிபான் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்து அப்பாவி இளைஞர்கள் ஆயுத பயிற்சி பெற்று வருகின்றனர். வெடிமருந்துகள், ஆயுதங்களுடன் இந்தியாவில் விரைவில் தாக்குதல் நடத்தவும் தயாராகி வருவதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மும்பையில் நடந்த பயங்கர தாக்குதல் போல மீண்டும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் நாசவேலை நடைபெறும் வாய்ப்புள்ளதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர். பஞ்சாப் தலிபான் தீவிரவாதிகள், தாக்குதலுக்கு தயாராகி வரும் தகவலை அடுத்தே அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.


source:dinakaran

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails