Monday, October 26, 2009

ஏலத்தில் விடப்பட்ட காந்தியின் கடிதங்கள்

ஏலத்தில் விடப்பட்ட காந்தியின் கடிதங்கள் இந்திய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்
  வீரகேசரி இணையம் 10/24/2009 1:59:23 PM - மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் என்பன இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஏலத்தில் விடப்பட்டன. 

அப்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோர் காந்தி எழுதிய அபூர்வ கடிதங்களை ஏலம் எடுத்தனர். 

இஸ்லாமிய அறிஞர் மௌலானா அப்துல்பாரிக்குக் காந்தி இந்தியிலும், உருது மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் ஜெயிலில் இருந்த போது எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும். 

மகாராணி எலிசபெத்தின் விருந்தினராக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் செல்கிறார். புதன்கிழமை நடை பெறவிருக்கும் விழாவின் போது, இக்கடிதங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். 

மேலும் இந்த விழாவில் காந்தி உபயோகப்படுத்திய ஏனைய சில பொருட்களும் கடிதங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கடிதங்களில் இந்து, முஸ்லிம்களின் உறவுகள் குறித்து காந்தி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
source:virakesari
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails