இலங்கையில் இறுதி போர் ராணுவ அத்துமீறலை விசாரிக்க குழு அதிபர் ராஜபக்சே முடிவு
கொழும்பு, அக். 27-
இலங்கையில் தனி ஈழம் கேட்டு கடந்த 27 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் போராடி வந்தனர். இதை தொடர்ந்து ஆயுதம் ஏந்தி இலங்கை ராணுவத்துடன் போரிட்டு வந்தனர். இதன் இறுதிக்கட்ட போர் கடந்த மே மாதம் நடந்தது.
அப்போது, தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் பல அத்துமீறல் நடந்ததாகவும், போர்க்குற்றங்கள் நடைபெற்றதாகவும் இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்து வந்தது. ஆனால் மே 2-ந்தேதியும், 18-ந்தேதியும் 170 சம்ப வங்களில் போர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளும், ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பும் குற்றம் சுமத்தி உள்ளன.
தற்போது அமெரிக்காவும் இக்குற்றச்சாட்டை வலியுறுத்துவது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ராணுவ அத்துமீறல் குறித்து விசாரிக்க குழு அமைக்க அதிபர் மகிந்த ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
இந்த தகவலை இலங்கை மனித உரிமை துறை மந்திரியும், அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான மகிந்த சமரசிங்கே தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் அறிக்கையின் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment