தடுப்பு முகாம்களிலுள்ள மக்களில் விடுதலைப் புலிகளை வேறுபடுத்தி அறிவதற்காக கையாளப்படும் செயல்முறைகள் பிறருக்குத் தெரிவதில்லை என்றும் இதுவரை 11,000 பேருக்கு மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் புலிகள் எனக் கூறப்பட்டு வேறு தனி முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபாண்ட் நேற்று ஹவுஸ் ஒஃப் கொமன்ஸுக்கு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சுதந்திரமாக நடமாடுவது குறித்த செய்யவேண்டியவற்றில் பிரிட்டனும் பிற நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறியுள்ள அவர் பருவகால மழை ஏற்படின் அங்குள்ள மக்களுக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
அண்மைய வாரங்களாக அங்கு மருத்துவ வசதிகள், தண்ணீர் வசதிகள் சரியாக வழங்கப்படுவதில்லை. ஓகஸ்ட் மாத மழையில் ஏற்பட்ட அவலம் அந்த முகாம்கள் சரியாக அமைக்கப்படவில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. எனவே ஒக்ரோபர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் வரையான பருவகால மழைக்கும் அந்த முகாம்கள் முறையாக அமைக்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட் முகாம்களைச் சுற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட மக்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகுறித்து தாம் மிகுந்த கவனம் எடுபதாகவும் கவலை கொள்வதாகவும் கூறிய மில்லிபாண்ட், இடம்பெயர்ந்த மக்களிடையேயுள்ளவர்களில் புலி சந்தேகநபர்கள் என சுமார் 11,000 பேர் வரை வேறாக்கப்பட்டு தனி முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதும் கவலைப்படவேண்டிய விடயம் எனத் தெரிவித்தார். அவர்கள் எவ்வாறு வேறாக்கப்படுகிறார்கள் என்பது தெரிவதில்லை என்றும், அவர்களைத் தடுத்து வைத்துள்ள முகாம்களுக்கு ஐ.சி.ஆர்.சி அல்லது ஐ.நா அமைப்புகள் எதுவுமே செல்ல முடியாதென்றும் மேலும் கூறினார்.
இலங்கைக்கு செய்யவேண்டி நிலுவையில் காத்துள்ள உதவிகளைச் செய்ய வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியத்தைக் கோருவதாக கடந்த ஜூலை மாதத்தில் பிரிட்டனால் எடுக்கப்பட்ட முடிவை மில்லிபாண்ட் நினைவூட்டியமையும் குறிப்பிடத்தக்கது
source:athirvu
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment