வாஷிங்டன் : "மத சுதந்திர விஷயத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பாக செயல்படுகிறது'என, அமெரிக்கா பாராட்டியுள்ளது.சர்வதேச அளவில் மத சுதந்திரம் எந்த அளவுக்கு கடை பிடிக்கப்படுகிறது என்பது குறித்து, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஜூலையில் இருந்து இந்தாண்டு ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் மத சுதந்திரம் பின்பற்றபட்ட விதம் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க ஜனநாயகம் மற்றும் மனித உரிமை துறை துணை அமைச்சர் மைக்கேல் போஸ்னர் கூறியதாவது:
இந்தியாவை ஆளும் ஐ.மு., கூட்டணி அரசு, மத சுதந்திர விஷயத்தில் பாராட்டத் தக்க வகையில் செயல்படுகிறது. பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, மத சுதந்திர விஷயத்தில் தேசிய அளவிலான நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. ஆனால், மாநில அளவில் கவலை அளிக்கும் விஷயங்கள் நடக்கின்றன. குறிப்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கொலை செய்யப்பட்டதால், ஒரு மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. 40 பேர் இதில் கொல்லப்பட்டனர். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவது கவலை அளிக்கிறது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மைக்கேல் போஸ்னர் கூறினார்.
No comments:
Post a Comment