நக்கீரன் இதழிலும், இணையம் ஊடாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் அதிர்வு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பலர் இவர் எழுதுவதைப் இப்போது படிப்பது இல்லை என்றாலும், பொறுப்புள்ள இணையம் என்றவகையில் அதைப் படித்த சிலருக்கு நாம் விளக்கம் கூறியாகவேண்டும். அதிர்வு இணையத்தளம் நடத்துபவர் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் எனவும், பின்னர் பொட்டு அம்மானால் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கஸ்பர் புணைந்துள்ளார் ஒரு சிறுகதை. அத்துடன் அதிர்வு இணைய நிர்வாகி இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் சேர்ந்து பலகாலமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள கஸ்பர் அடிகளார் , பின்னர் போர் உக்கிரமடைந்தக் காலத்தில் தேசியத்தலைவர் அதிர்வு நிர்வாகியை அழைத்ததாகவும் அவர் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
இலங்கை புலனாய்வுத் துறையுடன் நீண்டகாலமாக சேர்ந்தியங்கும் ஒருவரை தேசிய தலைவர் ஈழத்திற்கு வருமாறு அழைப்பாரா ? அடிமுட்டாளான கஸ்பர் இப்போது இவ்வுலகில் இல்லை, கனவு லோகத்தில் சஞ்சாரம் செய்கிறார். யாரிடமோ விசாரித்துவிட்டு அதனை அப்படியே சிறு பிள்ளைத் தனமாக எழுதுகிறார். அதற்குப் பிரபல நாளிதழ் ஒன்று களம் அமைத்துக் கொடுக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ள இவ் வேளையில், அரசியல் போராட்டத்தில் எமது சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுக்க நாம் அரும்பாடுபடும் வேளையில், இந்திய மத்திய அரசின் உதவியுடன் அடிகளார் அதனைத் கவுக்கப் பார்க்கிறார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை அதன் உன்னதத்தை விற்கவேண்டாம் என அதிர்வு வேண்டிக்கொண்டது, தமிழ் மக்களின் வாழ்க்கையோடு விளையாடவேண்டாம் என அது அவர்களைக் கேட்டுக்கொண்டது. அதில் பிழை எதுவும் இருப்பதாக நாம் கருதவில்லை. முன்னுக்குப் பின் பல முரணான தகவல்களுடன் மெகா சீரியல் எழுதுவதும், அதனை பரபரப்பாக்கி விற்றுச் சம்பாதிப்பதையும் நாம் நாளாந்தம் பார்க்கிறோம். அதிர்வு இணையத்தில் எழுதப்பட்ட கருத்துக்களால் ஆடிப்போயுள்ள கஸ்பர் அவர்கள் தற்போது புலம் பெயர் தமிழர்களின் இணையமான அதிர்வை நேரடியாகத் தாக்க முனைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தடைப்பட்டுள்ள எங்கள் போராட்டங்களை முன்னெடுத்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடுதல் என அதிர்வு இணையத்திற்கு பல பொறுப்புகள் இருக்கிறது, இவரைப் போன்ற விமர்சகர்களின் விமர்சனத்திற்கு நாம் முகம் கொடுத்து எமது காலத்தையும் நேரத்தையும், வீணடிக்க விரும்பவில்லை. யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்பதை இனி வரும் காலம் சொல்லும், கஸ்பரின் முகத்திரை கிழிக்கும் ... தெரு நாய் குரைக்கிறது என்று நாமும் குரைக்க முடியுமா ?
-- source:athirvu
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment