லண்டன் : உலகின் மிகவும் வயதான நாயாக ஓட்டோ ஜோன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இது இடம் பெற்றுள்ளது. பிரிட்டனில் காணப்படும் டாக்ஷந்த் டெரியர் இனத்தைச் சேர்ந்தது ஓட்டோ ஜோன்ஸ். இதன் வயது 20 ஆண்டுகள் 8 மாதங்கள். செக்ஸ் விஷயத்தில் பேச்சலர். உணவுக் கட்டுப்பாட்டு டன் வளர்க்கப்பட்ட ஓட்டோ, உலகிலேயே வயதான நாயாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர்களான பிரிட்டனில் வசிக்கும் லின் மற்றும் பீட்டர் ஜோன்ஸ் தம்பதி, ஓட்டோ பற்றி கூறுகையில்,
ÔÔஓட்டோ குட்டியாக இருந்தபோது, ஷ்ராப்ஷைரிலிருந்து கொண்டு வந்து வளர்த்தோம். அவனுக்கு கொழுப்பு அல்லாத நல்ல சத்தான உணவு வகைகளையே வழங்குவோம். சண்டே டின்னர் மற்றும் காய்கறிகள் மிகவும் விரும்பி சாப்பிடுவான். எங்களது தெருவில் விளையாடும் குழந்தைகள், ஓட்டோவுடன் விளையாடுவதை மிகவும் விரும்புவார்கள். இப்போதுகூட, முதிய வயதிலும் மிகவும் துடிப்பாக உள்ள இவன், குழந்தைகளு டன் ஓடியாடி விளையாடுகிறான். மிகவும் தைரியமான அவன் எதைக் கண்டும் பயப்படமாட்டான்ÕÕ என்றனர்
Friday, October 30, 2009
கின்னஸில் இடம் பிடித்தது உலகின் வயதான நாய் 20 வயது ஓட்டோ தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment