ஒரிசா மாநிலத்தின் பெயர் "ஒடிசா என்று மாறுகிறது; ஒரியா மொழி "ஒடியா"வாகிறது
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்களை மாநில அரசுகள், தங்கள் பாரம்பரிய சிறப்புக்கு ஏற்ப மாற்றி வருகின்றன. திருவன்டிரம் என்றிருந்த பெயர் 1991-ல் திருவனந்தபுரமாக மாறியது. 1995-ல் பம்பாய் மும்பையாக மாறியது.
1996-ல் மெட்ராஸ் என்ற பெயர் சென்னை ஆக மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்ற வரிசையில் கல்கத்தா கொல்கத்தா என்றும், பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும் பெங்களூர் பெயர் பெங்களூரு என்றும் மாறின.
அடுத்து ஒரிசா மாநில அரசு தன் மாநிலத்தின் பெயரையே மாற்ற முடிவு செய்துள்ளது. ஒரிசா மாநில மக்கள் ஒரியா மொழி பேசி வருகிறார்கள். இந்த மொழிப் பெயரை மாற்ற தீர்மானித்துள்ளனர்.
ஒரிசா பெயர் ஒடிசா என்று மாறுகிறது. ஒரியா மொழியை இனி ஒடியா மொழி என்றழைக்க உள்ளனர்.
இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் இதற்காக ஒரிசா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்றக்கூட்டத் தொடரில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெறப்படும்.
அதன் பிறகு ஒரிசா பெயர் அதிகாரப்பூர்வமாக ஒடிசா என்று மாறிவிடும்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment