Tuesday, October 6, 2009
வயதாகும் தன்மைக்கு காரணம் என்ன? மூவருக்கு நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம் : இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறைக்குரிய நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த கரோல் கிரைடர், மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஜாக் ஜாஸ்டக் ஆகிய மூவரும், குரோமோசோம்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர் . இத்தகவலை சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. குரோமோசோம்களிலுள்ள டெலோமியரி என்ற செல் பகுதி தான் மனிதன் வயதாவதற்கு காரணம். இதன் தன்மையைப் பற்றி இந்த மூன்று விஞ்ஞானிகளும் ஆராய்ந்துள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியினால் என்சைம்கள் பற்றிய மருத்துவத்தில் புதிய சிகிச்சைகள் உருவாவதற்கு வழிபிறந்துள்ளதாகவும், செல்கள் பற்றிய புதிய பரிமாணம் மருத்துவத் துறைக்கு கிடைத்துள் ளதாகவும் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் கூறியுள் ளது. வழக்கமாக நோபல் பரிசு வழங்கும் போது முதலில் மருத்துவத் துறைக்கு வழங்குவர். அதுபோலவே இந்த ஆண்டும் மருத்துவத் துறைக்கான நோபல்பரிசு முதலில் அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு, ஐந்து கோடியே 21 லட்ச ரூபாய் மதிப்புடையது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment