துபாய், அக்.26-
முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் இமாம்கள் மதத்தின் பெயரால் பட்வா எனப்படும் தண்டனைகளை அறிவிப்பது வழக்கம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமானால், ஈரான் நாட்டின் மதத்தலைவரான கோமேனி சைத்தானின் கவிதை என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்ததை சொல்லலாம். இப்படி இமாம்கள் தங்கள் இஷ்டத்துக்கு பட்வா விதிப்பதற்கு சவூதி அரேபியா அரசு தடை விதித்து உள்ளது. இஸ்லாமிய விவகாரத்துக்கான அமைச்சரகம் இந்த தடையை பிறப்பித்து உள்ளது.
சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லா சமீபத்தில் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கினார். இந்த பல்கலைக்கழகம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதை விமர்சித்த மதகுரு ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இஸ்லாமிய நெறிகளை பாதுகாக்கும் போலீசுக்கு இந்த பல்கலைக்கழக வளாகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
source:dailythanthi 26/10/09
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment