வாஷிங்ணுவ வீரர்களின் உடலுக்கு, அதிபர் ஒபாமா நேற்று மரியாதை செலுத்தினார். ஆப்கனில், இந்த வாரம் நடைபெற்ற சாலையோர குண்டு வெடிப்பில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எட்டு பேர், ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு ராணுவ வீரர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஏஜன்ட்கள் மூன்று பேர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரின் உடலும், சி-17 விமானத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள டோவர் விமானப் படை தளத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதன் பின், அங்கு வந்த அதிபர் ஒபாமா, இறந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அதிபர் ஒபாமாவுடன், அட்டர்னி ஜெனரல் எரிக் கோல்டர், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் தற்காலிக நிர்வாகி மைக்கேல் லியன்கார்ட் மற்றும் இரண்டு அதிகாரிகள் ஆகியோர் உடன் வந்தனர்.
முன்னதாக அதிபர் ஒபாமா, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒபாமா அதிபராக பதவியேற்ற பின், இந்த விமானப்படைத் தளத்திற்கு தற்போது தான் முதல் முறையாக வருகை தந்துள்ளார். மரியாதை செலுத்திய பின், அவர் வாஷிங்டன் திரும்பினார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஆப்கனில் நடந்து வரும் போரில், இந்த மாதம் மட்டும், அமெரிக்காவைச் சேர்ந்த 53 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், ஆப்கனில் பயங்கரவாதிகளை ஒடுக்க நடந்து வரும் போருக்காக, அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment