Thursday, October 22, 2009

அறிவியல் - தொழில்நுட்பம்

 

மிகப்பெரிய விண்வெளி கற்கள் 

விண்வெளிக் கற்களிலேயே பெரியதான இதன் சுற்றளவு 950 கிலோ மீட்டர்கள் ஆகும். ரோமானிய விவசாய தேவதையின் பெயரான "செரஸ்' இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக் கற்களிலேயே முதன்முறை யாகக் கண்டுபிடிக்கப்பட்ட இது செவ்வாய்-வியாழன் கிரகங்களுக்கு இடையிலான சுற்று வட்டப்பாதையில் காணப்படுகிறது. இத்தாலிய விண்வெளி ஆய்வாளரான ஜியூசெப்பே பியாஸி இதை கண்டுபிடித்தார். ஆனால் இதன் சரியான இடத்தைக் கண்டுபிடித்தவர் கணிதவியல் அறிஞர் கார்ல் காஸ். இது கணித்துக் கூறப்பட்ட இடத்திலேயே அமைந்தி ருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் ஓராண்டுக்குப் பின் கண்டுபிடித்தனர். 

கூலி வேலை செய்யும் ரோபோக்கள் 

விவசாய பணிகளில் நாற்று நடுதல், அறுவடை செய்தல் போன்ற பணிகளில் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது காய்கள், பழங்களை சேகரித்தல், இலைகளை பறிப்பது போன்ற பணிகளை செய்யும் ரோபோக்களை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோக்கள் பழங்கள், காய்கள் இலைகளின் தடிமனை உணர்ந்து கொண்டு அவற்றை சேகரிக்கும். சரியான விளைச்சல் உள்ள காய், கனிகளை தேர்ந்தெடுத்து சரியாக பறிக்கும். சிறிது கூட சேதம் இல்லாமலும், தவறவிடாமலும் பணியை துரிதமாக செய்து முடிக்கும் திறன் உடையவை இந்த ரோபோக்கள். 

130 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த பறவைகள் 

130 ஆண்டுகளாக காணாமல் போயி ருந்ததாகக் கருதப்படும் பிஜி பெட்ரெல் (எண்த்ண் டங்ற்ழ்ங்ப்) என அழைக்கப்படும் கடல் பறவை யினம் பசிபிக் பெருங்கடலின் பிஜியின் குவா தீவு அருகே கடலின் மீது பறந்தப்போது கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இவ்வினத்தின் வளர்ச்சியுறாப் பறவை ஒன்று 1855-ஆம் ஆண்டில் பிஜியின் காவு (ஏஹன் ஒள்ப்ஹய்க்) தீவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 130 ஆண்டுகளாக இவை ""காணாமல்"" போயிருந்தன. இப்பறவையினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத் தினால் 192 ஆபத்துக் குள்ளாக் கப்படக்கூடிய அல்லது அரிதான இனங்களில் ஒன்றாக பட்டியல் படுத்தப் பட்டுள்ளது. 

தர்பூசணியில் இருந்து எரிபொருள் 

தர்பூசணியின் வெள்ளைப் பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றில் சர்க்கரையும், உயிரி எரிபொருள்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த எரிபொருள் எத்தனால் போல செயல்படும். அமெரிக்காவை சேர்ந்த வேளாண் அமைப்பு இதை கண்டுபிடித்து உள்ளது. தர்பூசணியில் உள்ள லைகோபின் மற்றும் சிட்ரலின் போன்ற ரசாயனங்கள் தேவைமிக்கதும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துமாகும். 

நில நடுக்க மண்டலமாகும் வங்கதேசம் 

2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி பேரழிவை ஏற்படுத்திய இந்தோ னேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட உலகின் அதிபயங்கர நிலநடுக்கத்தின் விளைவாக பூமியின் அடியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது வங்கதேச நாட்டில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 2006 முதல் மே 2009 வரை ரிக்டர் அளவு கோலில் 4-ம் அதற்கு சற்று கூடுதலான அளவிலும் பதிவான நிலநடுக்கங்கள் மட்டும் 86 என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நான்காவது விண்வெளி மையத்தை அமைக்கிறது சீனா 

விண்வெளி மையத்தை விரைவிலேயே அமைக்கும் நோக்கத்துடன், நான்காவது விண்கல ஏவு தளம் மையம் ஒன்றை நிறுவும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹனியன் தீவில் இந்த மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவின் விண்வெளி திட்டங்கள் அந்நாட்டின் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், எதிர்காலத்தில் ஆளுடன் கூடிய விண்வெளி விமானங்களை அனுப் பவே இந்த நான்காவது விண்கல ஏவுதள மையத்தை சீனா அமைத்து வருகிறது. 

source:nakkheeran

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails