புதுடில்லி: இந்திய, திபெத்திய எல்லையில் நிலநடுக்க ஆய்வு மையத்தை சீனா தன்னிச்சையாக அமைத்துள்ளது. நீண்ட காலமாக இந்தியாவுடன் இது குறித்து கலந்து பேசி இணைந்து அமைப்பதாக எடுத்த முடிவுக்கு எதிராக சீனா தற்போது அதிரடியாக தனியாக அமைத்து கொண்டது. இது தொடர்பாக சீனாவில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய குழுவின் துணை இயக்குநர் ஷாங்ரோங்போ கூறியிருப்பதாவது: திபெத்தில் உள்ள திங்கிரி கிராமத்தில் இருந்து 14 ஆயிரம் அடி தொலைவில் எவரெஸ்ட் மலை பகுதியில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சீனா- நேபாள எல்லையில் அவ்வப்போது மாறுகின்ற கால நிலை மாறுபாடுகள் உடனுக்குடன் சேட்டிலைட் மூலம் தகவல்களை தந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
இமாலய மலையையொட்டியுள்ள சீன பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் இதனை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக நில நடுக்க மையம் அமைக்க சீனா முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக இந்தியாவிடம் பல முறை ஆலோசித்து, இந்தியாவுடன் இணைந்து இந்த மையத்தை அமைத்து கொள்வதாக ஏற்கனவே பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் சீனா தன்னிச்சையாக அமைத்துள்ளது. இது சீனாவுக்கு இந்தியா மீது உள்ள அலட்சியத்தையே காட்டுகிறது.
அருணசாசல பிரதேச விவகாரம், காஷ்மீர் விசா உள்ளிட்ட விவகாரங்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சீன மையம் சீனாவின் முன்னெச்செரிக்கை முன்னோட்ட நடவடிக்கை என்ற யூகம் கூட கிளம்புகிறது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் இந்தியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடத்தினாலும் இது சீனாவுக்கு தகவல் கொடுத்துவிடும் என்பது நமது வாசகர்களுக்கு கூடுதல் தகவல் ஆகும்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment