வன்னியில் தொடரும் பாரிய மோதல் ! வெளிவராத செய்திகள் ! இரு தரப்பும் தொடர்ந்தும் மௌனம். | |
| |
வன்னிப் போர்க்கள முனைகளில் படையினரின் விநியோக இலக்குகளை வைத்து விடுதலைப்புலிகளால் அணை;மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் படைத்தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் ஆயுதவலுவை மேம்படுத்தும் நோக்கில் படையினரின் விநியோக மையத்தளங்களை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை முதல் பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் நேற்றும் கரும்புலிகள் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தமது தளங்களுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் வெடி பொருட்களைக் கைப்பற்றுவதை இலக்கு வைத்தே கூடிய கவனம் செலுத்துவதாக படைத்தரப்பு அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது பெருமளவான வெடிபொருட்களும் ஆயுத தளபாடங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் புலிகள் தரப்பில் இது தொடர்பில் மௌனமே காக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை முதல் வன்னிக் களமுனைகளில் தொடர்ச்சியான விடுதலைப்புலிகளின் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியான போதிலும் விடுதலைப் புலிகள் இது தொடர்பில் எதுவுமே பிரஸ்தாபிக்கவில்லை. இதேவேளை படைத்தரப்பும் விடுதலைப் புலிகளிடம் இருந்து செய்திகள் வராத நிலையில் மௌனம் காத்து வருகின்றது. இந்த நிலையிலேயே நேற்று முன் தினம் இரவும் நேற்றும் இடம்பெற்ற தாக்குதல்களின் போது விடுதலைப்புலிகளின் இரண்டு கரும்புலிகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது கணிசமான அளவில் ஆட்லறி உட்பட ராணுவத் தளபாடங்கள் விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் படைத்தரப்பு அதிகாரிகள் இது தொடர்பில் மௌனமே காத்து வருகின்றனர். புதுக்குடியிருப்புச் சந்தியை நோக்கி இலக்கு வைத்து முற்படுகின்ற படையினரை தொடர்ந்தும் பின்னோக்கித் தள்ளுவதிலேயே விடுதலைப் புலிகள் முனைப்புக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படைத்தரப்பு இத் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கேப்பாபுலவு எனும் பகுதியில் கணிசமான அளவு பின்னகர்ந்திருப்பதாக சுயாதீன அவதானிப்புச் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் நேற்று முன்தினம் இரவு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியான போதிலும் இரு தரப்பிலும் இது தொடர்பில் மௌனமே பேணப்பட்டு வருகின்றது. வன்னிப் பெருநிலப்பிரப்பில் சுயாதீன ஊடகவிலாளர்கள் எவருமே அற்றதொரு சூழலில் இந்தத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாதிருந்தது. தற்போது விடுதலைப்புலிகளினால் முன்னணிப் போர்நிலைகளுக்கு விநியோகிப்பதற்கென படைத்தரப்பால் பேணப்படுகின்ற ஆயுதக் களஞ்சியங்கள் இலக்கு வைத்து தாக்கப்படுவதான செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன. |
http://www.athirvu.com/oneadmin/newspublish/home.viewdetails.php?news_id=87
No comments:
Post a Comment