|
இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை ராணுவம் திணறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வடக்குப் பகுதியில் மிகவும் குறுகிய பரப்பளவுக்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராணுவம் தெரிவித்தது. ஆனால் புலிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ராணுவம் முன்னேறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு என்ற பகுதி மட்டுமே புலிகள் வசம் தற்போது உள்ளதால், அதை தக்கவைப்பதற்கு அவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கொம்புவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடும் சண்டைக்குப் பிறகே ராணுவம் அப்பகுதியை பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்காக இதுவரை நடந்த சண்டையில் விடுதலைப் புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறிய ராணுவம், அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கமுடியாமல் திணறுகிறது.
ஆனால் அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மெதுவாக முன்னேறிவருவதாக ராணுவம் கூறுகிறது.
ஆனையிறவு அருகே உள்ள சலாய் என்ற இடத்தில் நடந்த சண்டையில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளதை இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
பலமட்டாளம் என்ற இடத்தில் புலிகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தலைவர் தெரிவித்தார். |
Thursday, February 26, 2009
புதுக்குடியிருப்பு:திணறுகிறது இலங்கை ராணுவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment