Tuesday, February 17, 2009

ஐ.நா. மட்டுமல்ல எந்தக் கொம்பனும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே

ஐ.நா. மட்டுமல்ல எந்தக் கொம்பனும் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்ற தொனியில் ராஜபக்சே கூறியுள்ள செய்தியை படியுங்கள் 
 
 
இலங்கை பிரச்சனையில் ஐ.நா. உட்பட எந்த ஒரு நாடும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கை பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒர அனைத்துலக நாடுகளும் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சே,

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளும் சொல்கின்றன. ஐ.நா.சபை மூலம் போரை நிறுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.

இலங்கை பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. ஐ.நா. சபை உள்பட எந்த ஒரு நாடும் இலங்கை விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்.

மக்களை பாதுகாக்கும் முறைகள் பற்றி இலங்கைக்கு எந்த நாடும் சொல்லித்தர வேண்டியதில்லை. நாங்கள் மக்களை எப்படி பாது காக்கிறோம் என்பதை அறிய வேண்டுமானால், ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் இங்கு வந்து பார்த்து விட்டுப் போகட்டும்.

இலங்கை மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க மாட்டோம். அதற்கு என் தலைமையிலான அரசாங்கம் ஒரு போதும் இடம் கொடுக்காது என்றார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails