கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படுவது கேரளா அதில் 3-ஆண்டுகளில் 21,000-பேர் தற்கொலை | | கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் வாழும் கேரளத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.அம்மாநிலத்தில் கடந்த 3-ஆண்டுகளில் மட்டும் 21,000-க்கும் அதிமானோர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது குறித்து கேரள சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியது:
மாநிலத்தில் கடந்த 3-ஆண்டுகளில் 21,914-பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2006-ம் ஆண்டில் 5,601-பேரும்,2007-ல் 8,962-பேரும்,நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம் வரை 7351-பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளாத வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தமளிக்கிறது.தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
| |
No comments:
Post a Comment