ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்:அப்துல்கலாம்
மங்களூர் மங்களாதேவி டெம்பிள் ரோட்டில் உள்ள கார்பரேசன் வங்கி தலைமை அலுவலகத்தில் `நானும், எனது சமுதாயமும்' என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார். மங்களூரில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்துல்கலாமிடம் மாணவ-மாணவிகள் சரமாரியமாக கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் அவர் நிதானமாக பதில் அளித்தார்.
அப்போது, ஸ்லம் டாக் மில்லினர் படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது பற்றி உங்களது கருத்து என்ன?என்று மாணவர்கள் கேட்டதற்கு,
''அந்த படத்தின் கதை மூலம் ஒரு நல்ல கருத்தை சொல்லி உள்ளனர். அந்த கருத்துக்கு கிடைத்த பரிசு தான் இவை. அந்த படத்தில் கெட்டது இருந்தால் அதை விட்டு விட வேண்டும். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment