Friday, February 27, 2009

கடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை!-27/02/2009

கடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை!

27/02/2009

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த  வாரம்     மூழ்கடித்திருக்கிறார்கள்.கடந்த 8 ஆம் திகதி         முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலி ல் கடற்படையினரின் 'அரோ' ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர ரோந்துப் படகுகள் கடற்பு லிகளால் மூழ்கடிக்கப்பட்டன.அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதி, கடற்படையின்    P-434 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.இந்தத் தாக்குத ல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை. கடற்புலிகளின் பலத்தை முறியடிப்பதற்கு கடல் நடவடி க்கைகள் மட்டும்  போதாது    என்று, தரைவழி     நடவடிக்கைகளை         இராணுவம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

 

மூன்றுவாரங்களுக்குள் கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும்,   இரண்டு அரோ ரக கரையோர ரோந்துப் படகுகளும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.கடற்புலிகளின் பலம் பற்றிய கேள்விகளை இந்தத் தாக்குதல்கள் எழுப்ப வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல் லை.இப்போது இந்தத் தாக்குதல்கள் பற்றியும் இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்.

முதலாவது தாக்குதல் கடற்கரும்புலிகள் இருவரால் நடத்தப்பட்டது.கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் - கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ரோந்து சென்று கொண்டிருந்த போது தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இரவு 11.28 மணியளவில் கரும்   புலிகளின் தாக்குதல் படகு, கடற்படைப் படகுக்கு அருகே சென்று வெடிக்கும் வரை - கடற்புலிக ளின் நகர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.இந்தத் தாக்குதலில் கடற்படையின் 4 வது இலக்க அதிவேகத் தாக்குதல் படகு முற்றாகச் சேதமடைந்ததுடன், படையணியின் கட்டளை அதிகாரியான லெப். கொமாண்டர் அபேசிங்கவும் பலியானார்.அத்துடன் லெப். பெரேரா மற் றும் P-434 கடற்படைப் படகின் கட்டளை அதிகாரியான லெப். சம்பத் உள்ளிட்ட மொத்தம் 19 கடற்ப டையினர் கொல்லப்பட்டனர்.கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து கடற்படை முழு நேர மும் உசார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற்கரும்புலிகளின் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.அது கடற்படையினரின் கண்  ணில் பட்டுவிட அதைத் தாக்கியழித்தனர். இதில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைய நேரிட்டது.ஆனால், அதேதினம் முல்லைத்தீவுக் கடலில் ரோந்து சென்ற கடற்படையின் சிறப் புக் கொமாண்டோ அணியினரின் 'அரோ' கரையோர ரோந்துப் படகுகளை கடற்புலிகள் வழிமட க்கித் தாக்குதல் நடத்தினர்.15 வரையான கடற்படைப் படகுகள் கொண்ட அணியை வழிமறித்த இந்தத் தாக்குதல் காலை 10 மணியளவில் இடமபெற்றிருந்தது.இதில் இரண்டு 'அரோ' வகை கரையோர ரோந்துப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.ஆனால், கடற் படையோ இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.

இதன் பின்னர் தான் கடந்த 8ஆம்திகதிமுல்லைத்தீவுக் கடலில் மற்றொரு அதிகவேகத் தாக்கு தல் படகைக் கடற்கரும்புலிகள்   மூழ்கடித்திருக்கிறார்கள்.  இந்தச் சண்டை 8 ஆம் திகதி அதி காலை 5.30 மணி  முதல் 6 மணி வரை நடந்திருகிறது.     கடற்கரும்புலிகளோடு கடற்புலிக ளின் அணியும் சண்டையில் பங்கேற்றிருக்கிறது.இதில் கடற்படையின் ஒரு   'சுப்பர் டோறா' மூழ்கடிக்கப்பட்டதாகவும், மற்றொன்று பலத்த சேதத்தக்கு உள்ளானதாகவும்   புலிகள் கூறியுள்ளனர். இந்தப் படகில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் புலிகளின் தகவல்கள் கூறுகின்றன.இதை ஒரு வலிந்த தாக்குதல் என்று புலிகள் கூறியுள்ளனர்.ஆனால், முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவுக்குச் சென்று அவர்கள் வலிந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஏனெனில், கடற்படை முல்லைத்தீவைச் சுற்றி இப்போது நான்கு கட்டங்களாகப் பாதுகாப்பு வல யங்கள் அமைத்து தமது வெவ்வேறு விதமான 50 இற்கும் அதிகமான   போர்க்கலங்களை நிறுத் தியிருக்கிறது.அதுவும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள    கரையோரப் பகுதியானது - சாலைக் குத் தெற்கேயும் வட்டுவாகலுக்கு வடக்கேயுமாக 15 கி.மீ பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக் கிறது.இந்த நிலையில் கடற்படையால் கடற்புலிகளின் நகர்வுகளைத் தடுப்பது இலகுவான காரி யமாகவே இருக்கிறது.ஆனாலும், கடற்புலிகள் முல்லைத்தீவுக் கடலில் அடுத்தடுத்து தாக்குத ல்களை நடத்தி வருகின்றனர்.

கடற்படையின் 4 கட்டப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முதலாவதாக கரையோர ரோந்துப் படகு கள் மூலமும், அடுத்ததாக அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலமும், அதையடுத்து பீரங்கிப் பட குகள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.கடைசியும் நான்காவதுமான கண்காணி ப்பு வலயத்துக்கு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.கடற்புலிகள் வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு கரையோர ரோந்துப் படகுகள் அதிகளவில் கரைக்கு நெருக்கமாக வே நடமாடுகின்றன. அதற்கடுத்து கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவு வரையில் அதி வேகத் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் இருக்கிறது.அதற்கு அப்பால் பீரங்கிப் படகுகள், ஆழ் கடல் ரோந்துப் படகுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து சென்று கடற்புலிகள் வலிந் ததாக்குதல் நடத்த முற்படுவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

 

http://www.tamilkathir.com/news/1095/58//d,full_view.aspx

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails