புதுக்கோட்டை அருகே தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார். (புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)
திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவன்னண், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம்பெற்ற தட்டிகள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றிருந்தன. இந்த தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கூட்ட அமைப்பாளர்களிடம் கூறினார்கள்.
அப்போது கூட்டத்திற்கு தலைமை வகித்த விசை ஆனந்தின் தலைமையில் 5 பேர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக கூறினார்கள். இதையடுத்து போலீசார் அமைதியானார்கள்.
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி தலைமையில் காவல்துறையினரே பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்த தட்டிகளை, அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தேமுதிக பிரமுகர் மன்மதன் தலைமையில் 15 பேர் பொதுக்கூட்ட மேடையிலேயே மண்ணெண்ணெயை தங்களின் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.
No comments:
Post a Comment