Wednesday, February 25, 2009

விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள்

ஈழ மக்களை பாரிய அழிவுக்குள்ளாக தள்ளிக்கொண்டிருக்கும்  லங்கை அரசாங்கம் தன்னுடைய மனிதக்கொலைபாதகத்தை உலகம் பார்க்ககூடாது என்பதாற்காக புலிகள் மீது பல குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகிறது.அதில் ஒன்றுதான் விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சி 
 
 
மேலும் வாசிக்க
 
 
மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்ய புலிகள் முயற்சி – அரசாங்கம்
மோசமான அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய இரசாயன ஆயுதங்களை சர்வதேச ஆயுத சந்தையில் கொள்வனவு செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செலயாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

தெர்மோபெரிக் எனப்படும் மிக மோசமான ஆயுதம் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை கொள்வனவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெர்மோபெரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் குறித்த பிரதேசத்தில் பாரிய தீப்பிழம்பு ஏற்படும் எனவும் சுற்று புறத்தில்காணப்படும் ஒட்சிசனின் அளவு வீழ்ச்சியடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஆயுதங்களின் மூலம் யுத்த களத்தில் பாரிய அழிவுகள் ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைபேசி உரையாடல் மற்றும் வேறும் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்டதன் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை விரும்பவில்லை எனவும், குறித்த யுத்தநிறுத்த காலத்தில் தமது படைபலத்தை விரிவுபடுத்தவே முனைவதாக அவர்
தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் குறித்து முழுமையான கருத்து வெளியிட முடியாது எனவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் இது குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bP9ES34d3IWnT3b02r7GQe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0vj0q3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails