Friday, February 20, 2009

கொழும்பில் இராணுவ தலமையகம் உட்பட பல இடங்களில் வான் புலிகள் தாக்குதல்

கொழும்பில் இராணுவ தலமையகம் உட்பட பல இடங்களில் வான் புலிகள் தாக்குதல் (4 ம் கட்டம்)    

alt

(4 ம் கட்டம்) இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் கொழும்பின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இரண்டுக்கு மேற்ப்பட்ட வான் ஊர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

 

 

 

 

 
பாதுகாப்பு காரணங்களிற்காக உடனடியான மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கொழும்பு நகர் இருளில் மூழ்கியுள்ளது.
 
கொழும்பு இறைவரித் திணைக்களத்தின் மீதும், இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தளத்தின் மீதும்  என பல இடங்களிலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத் தலமையகம் உட்பட பல இடங்கள் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
இதனை வன்னித் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
 
இதில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கேலித்திய ரம்புகல தெரிவித்தார். இவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுள்ளதாகவும் தெரிவித்தர்.
 
கொழும்பு வான் பரப்புற்குள் விடுதலை புலிகளின் விமானங்கள் வந்தவுடன் தங்களது விமான எதிர்ப்பு சமிக்கைகள் தன்னிச்சையாக செயற்ப்பட்டதாகவும் இதனால் கொழும்பு மக்கள் பீதி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
படையினர் விமான எதிர்ப்பு தாகுதல்களை நடாத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவத்தரப்பின் ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.  
http://www.swissmurasam.net/news/breakingnews-/12335-2009-02-20-18-06-11.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails