|
|
இலங்கை இராணுவத்தில் இருந்து காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், தமது பிள்ளைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தேடிப்பார்க்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இராணுவ செய்தி ஊடகத்தினால், இவர்கள் விஸ்வமடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டதையடுத்தே அவர்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர். கண்டியில் உள்ள, இராணுவத்தில் காணாமல் போனவர்களின் சங்கத்தினால், சர்வதேச செஞ்சிலுவை சஙகத்தின் கொழும்பு கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், சுமார் 750 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி பெப்ரவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் விஸ்வமடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட நகர்வினை தாங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், அந்த பிரதேசத்தில் உள்ள தடுப்பு முகாமில் சுமார் 750 க்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இராணுவ இணையத்தளத்தில் காண்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அவர்களை விடுவிப்பது தொடர்பில் துரிதமாக செயற்பட வேண்டும் என அந்த கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
http://www.swissmurasam.net/news/breakingnews-/11950--750-----.html
No comments:
Post a Comment