ஐரோப்பிய செய்திகள்! 14.02.2009
முக்காட்டு பெண்களை முன்னுக்கு இழுக்கும் சவுதி மன்னர் !
இஞ்சி திண்ட குரங்காக பாய்ந்தது இஸ்ரேல் !
ஒஸாமாவைத் தேடி ஒபாமா வீசிய மிசைல்ஸ் 25 பேர் அவுட் !
சோறு தின்னப் போனவர்களை சுக்கு நூறாக்கினாள் சொக்கி !
வயிற்றினால் தரையை உரசிய பிரிட்டன் விமானம் !
பாடகி மடோனாவின் நிர்வாணப்படம் 37.500 டாலர் ஏலம் !
தொலைக்காட்சி பாடல் போட்டி தமிழ் இளைஞர்கள் தேர்வு !
டென்மார்க் தொலைக்காட்சி சேவை ஒன்றினால் நடாத்தப்படும் எக்ஸ் பக்ரோ என்ற தொலைக்காட்சிப் பாடல் போட்டியில் மூன்று தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றார்கள். இதில் மூன்று டென்மார்க் வாழ் தமிழ் இளையோர் ஏசியன் சென்சேசன் என்ற பாடலைப் பாடி வெற்றியை பெற்றனர். தமிழ் இளைஞர்கள் டேனிஸ் ஊடகத்துறையிலும் பாடல் துறையிலும் பெரும் முன்னேற்றமடைந்து வருவதை இந்த நிகழ்வு காட்டுகிறது. ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை இந்த மூவரும் தமது பணியை சோர்வின்றி சிறப்புடன் செய்து அவையின் பெரும் பாராட்டுக்களைப் பெற்றார்கள்.
—————————————————————————————————————–
முக்காட்டு பெண்களை முன்னுக்கு இழுக்கும் சவுதி மன்னர் !
சவுதி அரேபியாவில் வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு சவுதியின் இஸ்லாமிய கடும் சட்டங்களில் ஏற்பட்டுள்ள முக்கிய தளர்வு என்று கருதப்படுகிறது. மேற்கண்ட பெண்மணி உதவிக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட இருக்கிறார். இவருடைய பெயர் இதுவரை வெளிவரவில்லை. அதேபோல குடியுரிமை ஆலோசனைத் திணைக்களத்தின் தலைவராகவும் சாரா என்ற பெண்மணி நியமிக்கப்பட இருக்கிறார். இதுபோல உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய வங்கியின் உயர்தர நிர்வாக அதிகாரி ஆகிய பதவிகளுக்கும் சவுதி மன்னர் பெண்களை நியமிக்க இருக்கிறார்.
————————————————————————————————————————————
இஞ்சி திண்ட குரங்காக பாய்ந்தது இஸ்ரேல் !
இஸ்ரேல் நடாத்திய திடீர் விமானத் தாக்குதலில் காஸா வட்டகையில் உள்ள கட்டிடமொன்று இடிந்து தரைமட்டமானது. இதில் ஒரு பாலஸ்தீனர் இறந்து இன்னொருவர் படுகாயமடைந்தார். கடந்த சில நாட்களாக தாக்குதலை நிறுத்தியிருந்த இஸ்ரேல் திடீரென வீறு கொண்டு எழுந்தது சமாதானத்தின் இன்னொரு முறிவு என்று கருதப்படுகிறது.
—————————————————————————————————————————
ஒஸாமாவைத் தேடி ஒபாமா வீசிய மிசைல்ஸ் 25 பேர் அவுட் !
பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையில் இருந்த கட்டிடமொன்றின் மீது அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் இடம் பெற்றது. இத்தாக்குதலில் சுமார் 25 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் முகாஜிதீன்களின் கூட்டமொன்று நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரியவருகிறது. பராக் ஒபாமா பதவிக்கு வந்த பின்னர் மூன்றாவது தடவையாக பாகிஸ்தானில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதல் இதுவாகும்.
—————————————————————————————————————————
சோறு தின்னப் போனவர்களை சுக்கு நூறாக்கினாள் சொக்கி !
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தென்புறத்தே மத கொண்டாட்டம் ஒன்றில் பங்கேற்று உணவு உண்டு பசியாறச் சென்ற சியா முஸ்லீம்களின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் பரிதாப மரணமடைந்தனர். மேலும் 70 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும் சிறு பிள்ளைகளுமாவர்.
—————————————————————————————————————————
வயிற்றினால் தரையை உரசிய பிரிட்டன் விமானம் !
பிரிட்டீஸ் எயார் லைன்சுக்கு சொந்தமான விமானமொன்று லண்டன் சிற்றி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதனுடைய முன்புறச் சில்லு முறிந்தது. இதன் காரணமாக விமானம் வயிற்றுப்புறத்தை தரையில் மோதி உராய்ந்தபடியே இழுவுண்டு சென்றது. கடும் உராய்வு காரணமாக தீப்பிடிக்கும் அபாயம் இருந்ததால் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கும் பெரும் காயங்களோ இழப்புக்களோ ஏற்படவில்லை.
—————————————————————————————————————————
பனிப்பாரத்தால் கீழே விழுந்த அமெரிக்க விமானம் !
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க பபலோ விமானம் ஒன்று தனியார் வீடொன்றின் மேல் விழுந்து 49 பேர் மரணித்து, தரையில் இருந்த ஒருவரும் பலியானது தெரிந்ததே. இப்போது இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு அதிலிருந்த விபரங்களும் வெளியாகியுள்ளன. இந்த விமானம் கிளம்பும்போதே இறக்கைகளில் அளவுக்கு அதிகமான பனிக்கட்டிகள் நிறைந்திருந்த காரணத்தால் உண்டான அழுத்தம் இந்த விபத்திற்குக் காரணம் என்ற கறுப்புப் பெட்டித் தகவல்கள் கூறுகின்றன.
———————————————————————————————————————–
பாடகி மடோனாவின் நிர்வாணப்படம் 37.500 டாலர் ஏலம் !
No comments:
Post a Comment