|
|
தமிழீ விடுதலை புலிகளின் விமானத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மலையத்தை சேர்ந்தவர் என படையினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை இரவு தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படை கரும்புலிகள் இலங்கை விமானப் படை தலைமையகம்,கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் என்பனவற்றின் மீது வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தமது இரண்டு விமானப்படை கரும்புலிகள் வீரமரணம் அடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மலையகத்தை சேர்ந்த ஒருவர் என படை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தாக்குதலில் விமானப்படையினருக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்கத விமானப்படைத்தளத்துக்குள் பல்வேறு தடவைகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படை தாக்குதல் நடத்திய பின்னர் இறுதியிலேயே தமது விமானங்களை இலக்குநோக்கி வெடிக்கவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின்போது கொழும்பு துறைமுகப்பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப்புலிகளின் இந்த விமானத்தாக்குதல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த தாக்குதலில் விமானப்படையின் முக்கிய தளபதி ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. |
http://www.swissmurasam.net/news/breakingnews-/12339-2009-02-21-07-37-33.html
No comments:
Post a Comment