Saturday, February 14, 2009

விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் விநியோகம் செய்வது யார் என்று கண்டுபிடிப்பு?

விடுதலைப் புலிகளுக்கு கிழக்குத் திமோர் அமைப்பொன்று ஆயுத விநியோகம்: சிங்கள ஊடகம் தகவல்
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிழக்குத் திமோர் அமைப்பொன்று ஆயுத விநியோகம் செய்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
கிழக்குத் திமோரைச் சேர்ந்த ப்ரோட்லின் என்ற அமைப்பே இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளனர்.
 
முல்லைத்தீவு பிரதேசத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் இது புலனாகியுள்ளது.
 
இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்கள் கருதி அவை வெளியிடப்பட மாட்டாதெனவும் காவல்துறை உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்குத் திமோரிலிருந்து ஆயுதக் கப்பலை தருவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dbj0W0ecGG7h3b4P9EE4d2g2h2cc2DpY3d436QV2b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails