இலங்கையில் நடந்து வரும் போரை சிங்கள மக்களே எதிர்க்கிறார்கள் என்று ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டவருமான ஸ்ரீதுர்கா ஜெயசூர்யா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், அதிபர் ராஜபக்சேவின் ஆட்சியை சிங்கள மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. ராணுவ நடவடிக்கையால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய சர்வதேச நாடுகள் நிர்பந்திக்க வேண்டும். சிங்கள மக்களே போரை எதிர்த்தே வருகிறார்கள். தங்களுடைய கருத்ûதை சொல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மீறி முயன்றால், அவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment