|
|
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. |
வன்னியில் இதுவரை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான படையினரின் உடலங்கள் எதுவும் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை எனவும் இதனால் சந்தேகம் கொண்ட மனைவிமாரும் பெற்றோரும் கொழும்பு இராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விபரங்களை தருமாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்து அனுராதபுரம், பொலநறுவ மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு இராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் படையினரை பார்வையிட அனுமதிக்குமாறும் பெற்றோரும் மனைவிமாரும் படைத் தளபதிகளிடம் மன்றாட்டமாக கேட்பதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800-க்கும் அதிமான படையினர் உயிரிழந்தும் 700-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என்பதை கொழும்பில் உள்ள உயர் இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்னியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட சாதாரண படையினரின் மாதாந்த சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே உறவினர்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, கொல்லப்பட்ட உயர் பதவியில் உள்ள படையினரின் சம்பளங்கள் மாத்திரமே அரசாங்கத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். |
No comments:
Post a Comment