கருணாநிதிக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் கெகலிய சவுக்கடி !
தமிழ் மக்கள் மீது பாசம் கொண்டுள்ளதாக முதலைக் கண்ணீர் !
ஆடு நனைகிறதென அழும் ஓநாய்கள்.
தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருவரையும் விட தமக்கு ஈழத் தமிழ் மக்களில் பாசம் அதிகமென கெகலிய ரம்புக்கவெல தெரிவித்துள்ளார். ஆடு நனைகிறதென ஓநாய் அழுதாலும், அழுகிற ஓநாய்களில் எந்த ஓநாய் நன்றாக அழுகிறதென போட்டி ஏற்பட்டுள்ளது. நேற்று மு.க.ஸ்டாலின் ஈழத் தமிழருக்காக அழுவதில் கலைஞர் மு.கருணாநிதியே முதலிடம் என்று கூற அதற்கு போட்டியாக தாமே முதலிடமென கெகலிய குறிப்பிட்டுள்ளார். இவர்களைவிட நானே முதலிடம் என்று ஜெயலலிதா தனது பிறந்த நாளையே நிறுத்தியுள்ளார். தமிழ் மக்களை ஒரே நாளில் கொல்லாமல் விட்டிருப்பது மகிந்தவின் பெருந்தன்மையே என்றும் கெகலிய தெரிவித்தார். பிரணாப் முகர்ஜிக்கும், மு.கருணாநிதிக்கும் கெகலிய கொடுத்துள்ள உலக்கை அடி இதுவென்று கருதப்படுகிறது. பழுக்காத வற்றாப்பளை பலாக்காய்க்கு உலக்கை அடி போட்டு பழுக்க வைப்பது போல மு.கருணாநிதிக்கு மேல் உலக்கையடி போட்டுள்ளார் என்று புலம் பெயர் நாடுகளில் பலர் பேசுவதைக் காண முடிகிறது. இது குறித்து வீரகேசரியில் வெளியான செய்தி வருமாறு.
எமது நாட்டு மக்கள் மீது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வைத்துள்ள அக்கறையை வரவேற்கின்றோம். ஆனால், முகர்ஜி, கருணாநிதி மற்றும் வெளிநாடுகள் காட்டும் அக்கறையை விட எமது நாட்டு எமது சகோதரர்களாகிய அப்பாவித் தமிழ் மக்கள் மீது அதிகளவு அக்கறை எமக்கு உண்டு.
இல்லாவிட்டால் முல்லைத்தீவில் ஒரு சிறு பிரதேசத்திற்குள் சிக்குண்டுள்ள புலிகளை ஒரே நாளில் அழித்துவிட முடியும். அப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளாமைக்கு அப்பாவித் தமிழ் மக்கள் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும், படையினரும் வைத்துள்ள அக்கறையே காரணமாகும்.
அரசாங்கம் இடம்பெயரும் மக்களுக்காக அறிவித்துள்ள யுத்த சூனிய பிரதேசங்களுக்கு மக்கள் நம்பிக்கையோடு வருகின்றனர். அவர்கள் மீது எமது படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால், இன்று திங்கட்கிழமை யுத்த சூனியப் பிரதேசங்களுக்கு வந்த பொது மக்களுடன் வந்த தற்கொலை குண்டுதாரி வெடிக்க வைத்த குண்டினால் 60 பொது மக்கள் காயமடைந்தும், பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனை சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் எதிரிகள் அரசாங்கம் அல்ல புலிகளே ஆவர். தமிழ் மக்கள் எமது நாட்டு மக்கள். அவர்களை பாதுகாப்பது எமது கடமையாகும். உலக நாடுகளை விட எமக்கு அதில் அக்கறை அதிகம். இந்தியா, தமிழ்நாடு உட்பட வேறு பல நாடுகள் தத்தமது அரசியலுக்காக கருத்துக்களை வெளியிடுகின்றன.
ஆனால், இந்தியாவின் கரிசனையை வரவேற்கின்றோம். ஏனெனனில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளதோடு அதற்காக எம்மோடு ஒத்துழைக்கின்றது. விடுதலைப்புலி பயங்கரவாதிகள் காரணமாகவே தமிழ் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதோடு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கும் உள்ளாகின்றனர்.
No comments:
Post a Comment