அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் அதிகாரி ஒருவர் உட்பட 12ற்கும் மேற்பட்ட சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் பௌத்த விகாரை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டுவிழா பெருமெடுப்பில் விசேட அதிரடிப் படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதேவேளையில் பிற்கல் 2.40 மணியளவில் அப்பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாகவும், இதில் அதிகாரி ஒருவர் உட்பட 12ற்கும் மேற்பட்ட சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தினையும், 12ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதனையும்;, மேலும் சிலர் காயமடைந்ததனையும் உறுதிப்படுத்தியுள்ள அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், இச்சம்பவத்தினை அடுத்து அப்பகுதியில் பெருமெடுப்பிலான தேடுதல் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். இக்குண்டு வெடிப்பின் சத்தம் பல மைல்கள் தூரத்திற்கு உணரப்பட்டதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளையில், நேற்றைய தினம் அப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்பட்டதாகவும் குடிசார் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. |
Sunday, February 15, 2009
கஞ்சிகுடிச்சாற்றில் குண்டு வெடிப்பு - 12 விசேட அதிரடிப்படையினர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment