
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 2 அதிகாரிகளும் 18 படைச்சிப்பாய்களுமாக 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 அதிகாரிகளும் 50 படையினருமாக 90 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று திங்கக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் விசுவமடு வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் பகுதியில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் படையினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 படையினர் உட்பட 90 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment