Monday, February 23, 2009

சென்னையில் HINDU அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் !

 
 
       



இன்று காலை (23.02.09), திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சு.ப.வீ அவர்களின் தலைமயில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர்  மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் ஒன்றுக் கூடி, தமிழின விரோத போக்கை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்து நாளேட்டின் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடத்தினர். இந்து நாளேட்டின் துரோக செயலை கண்டிக்கும் விதமாக பத்திரிக்கையின் தமிழின விரோத போக்கினை பட்டியலிட்டும், அதன் தலைமையைக் கண்டித்தும் கோசங்களை எழுப்பினர்.
இதில். பேராசிரியர் சு.ப.வீ உட்பட  சுமார் 100 க்கும் மேற்பட்டோர்  கைது செயப்பட்டு, பகல் முழுவதும் சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடத்தில் அடைத்துவைக்கப் பட்டிருந்தனர்.
 
கைது செய்யப்பட்டவர்களை, த.மு.மு.க கட்சியினரும், விடுதலை சிறுத்தைகளின் தமிழ் தேசிய முன்னணியின் மாநில அமைப்பாளர்.  பத்மநாபன் மற்றும் பெரியார் திராவிட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டு அடைக்கபட்டிருந்தபொழுதும், அடுத்தக் கட்டப் போராட்டத்தினைப் பற்றியும், தமிழின எழுச்சியை மேம்படுத்துவது பற்றியும் அனைவரும் விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
அந்நேரத்தில் உரை நிகழ்த்திய பேராசிரியர் சு.ப.வீ, கேணல் ரூபன் அவர்களின் கடிதத்தை பற்றியும் அவர்தம் தியாகம் மற்றும் அவரின் வீரத்தை பற்றியும் குறிப்பிட்டு பேசினார். மற்றும் முத்துக்குமார் உட்பட தீக்குளித்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசிய அவர் இனியும் இளைஞர்கள் இதுபோல செய்யாமல் இன விரோதிகளையும் துரோகிகளையும் எதிர்க்க ஒன்றிணைத்து செயல்படவேண்டும்  என்றும் பேசினார்.
மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு,  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் இளைஞர் அணிப் பொறுப்பாளர் செந்தில் அவர்கள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails