| |
அமெரிக்காவின் நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸிற்கு மூன்று மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு பெல்ப்ஸ் எந்தவொரு நீச்சல் போட்டியிலும் பங்குபற்றக் கூடாதென அமெரிக்க விளையாட்டுத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகைப்பிடிப்பதனைப் போன்றதொரு விளம்பரமொன்றில் தோன்றிய காரணத்திற்காக பெல்ப்ஸிற்கு இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் சட்ட விதிகளை பெல்ப்ஸ் மீறவில்லை என்ற போதிலும் பிழையான முன்னுதாரணமாக பெல்ப்ஸ் திகழக் கூடாது என்ற காரணத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீச்சல் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. மைக்கல் பெல்ப்ஸ் அமெரிக்காவில் மிகவும் பிரபல்யம் பெற்ற ஓர் விளையாட்டு வீரர். அவரை சிறுவர் முதல் பெரியோர் வரையில் பின்பற்றி வருவதாகவும், புகைப்படித்தலை தூண்டும் வகையிலான புகைப்படங்களில் தோன்றுவதன் மூலம் சமூகத்தின்று பிழையான எண்ணக்கருவை பெல்ப்ஸ் வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் இழைத்த தவறையிட்டு பெரும் வேதனையடைவதாகவும், சகலரிடமும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார். |
http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=392
No comments:
Post a Comment