Monday, February 16, 2009

இலங்கையின் கடைசி யுத்தம் கடலில்தான்!

பல ஆண்டுகளுக்கு முன் முல்லைத்தீவு கடல்பகுதி சிங்கள ராணுவத்தின் கையில்தான் இருந்தது. இதனால் புலிகளின் கடல் போக்குவரத்துக்கு தடைப்பட்டது. 'ஓயாத அலைகள்-1′ என்ற போரின் மூலம் முல்லைத்தீவை மீட்டார்கள் புலிகள். ஆறு மாத காலம் முல்லைத்தீவு கடற்படைத் தளத்தைப் புலிகளின் புலனாய்வுப் படை வேவு பார்த்து அதன் மொத்த பிளானையும் பிரபாகரனுக்குச் சொன்னது.

ஒருபக்கம் இந்து மகா சமுத்திரம், இன்னொரு பக்கம் நந்திக்கடல், அடுத்த பக்கம் வட்டவாகல் ஆறு என மொத்தமும் தண்ணீர்தான். இந்தப் பகுதியில் மொத்தம் 1,600 சிங்கள ராணுவ வீரர்கள் இருந்தார்கள். எட்டு முனைகளில் இந்த முனைகளைப் புலிகள் தாக்கினார்கள்.

இரண்டு முனைகளைக் கடற்புலி தாக்கியது. உடனே, பல்வேறு இடங்களில் இருந்து முல்லைத்தீவை நோக்கி ராணுவம் வந்தது. அவர்கள் அத்தனை பேரையும் பல இடங்களில் வழிமறித்தார்கள் புலிகள். சிக்கலில் மாட்டிக் கொண்ட சிங்கள ராணுவம், வான்படை வீரர்களை உள்ளே இறக்கியது. அவர்களையும் புலிகள் பிடித்தார்கள்.

காலை 9 மணிக்கு ஆரம்பித்த சண்டை மாலை 5 மணிக்கு முடிந்தது. புலிகள் பக்கம் 315 பேரும் ராணுவத்தினர் 1,500 பேரும் ஒரே நாளில் பலியான பெரிய சண்டை அது.

அங்குதான் 12 ஆண்டுகள் கழித்து இப்போது சண்டை நடக்கப் போகிறது. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப்படை உள்ளே நுழைய முடியாத இடத்தில், சிங்கள ராணுவம் ஒரு நாள் சண்டையில் பறிகொடுத்த இடத்தில் நடக்கப் போகிறது கடைசி யுத்தம்!
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails