February 4, 2009
சிங்கள சிறீலங்கா அரசின் சுதந்திர நாளான 04.02.2009 புதன்கிழமை தமிழர் வாழ்வின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் "அழிவிலும் எழுவோம்" என்ற குறியீட்டுப் பெயருடன் சுவிஸ் தமிழ் இளையோர்கள் விடுத்த அழைப்பை ஏற்று சுவிசில் பல பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் ஐநா வளவை நோக்கி அணி திரண்டு நிற்கின்றனர்.
ஜெனீவாவைச் சேர்ந்த சுபாஸ் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஐநா வளவில் அணிதிரண்டிருக்கும் மக்கள் தமது கரங்களில் தாயக அவலத்தை வெளிப்படுத்தும் பதாதைகள், மக்கள் தாங்கி நின்றனர். ஐநா முன்றலை நிறைத்து நின்ற தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் எழுச்சியுடன் காணப்பட்டனர். தமது கோரிக்கைகளை உலகின் உச்சிக்குக் கேட்கும் வண்ணம் தமது குரல்களை உயர்த்தி உரக்கக் குரல் எழுப்பிக் கொண்டு நின்றனர்.
No comments:
Post a Comment