|
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கையில் இறந்த உடலங்களைக் கொண்டு செல்லும் 35,000 பைகள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதனால் சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது விடுதலை புலிகளுக்கு சார்பாக செயற்பட்டுவருவதாகவும் குற்றம் சாட்டி இவரை சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச செஞ்லுவைச் சங்கத்தின் சார்பில் பேசவல்ல ஜெனிவா அதிகாரியான சைமன் சார்னோ தெரிவி்க்கையில் சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட தொகை மிகப்படுத்தியுள்ளதாகவும் நாம் வழமை போன்று இறந்த சடலங்களை கொண்டுவருவதற்கு 2000 பைகள் வாங்கவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார். இது ஒரு சாதாரணமான தொகை இராணுவத்திலும் விடுதலை புலிகளிலும் உயிரிழந்தவர்களின் சடலங்களை பரிமாறிக் கொள்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இதேவேளை கொழும்பு பம்பலப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கிளை மீது சிங்களக் காடயர்களினால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment